குடமிளகாய் கறி
Page 1 of 1
குடமிளகாய் கறி
தேவையான பொருள்கள்:
குடமிளகாய் = கால் கிலோ
தக்காளி = கால் கிலோ
தேங்காய் = கால் மூடி
வெங்காயம் = 2
பச்சை மிளகாய் = 2
சீரகம் = அரை ஸ்பூன்
முந்திரி பருப்பு = 5
கசகசா = 1 ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 2 ஸ்பூன்
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
கறிவேப்பிலை =சிறிது
கொத்தமல்லி இலை =சிறிது
செய்முறை:
குடமிளகாய் மற்றும் வெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.
தக்காளி, தேங்காய், முந்திரி பருப்பு, கசகசா மற்றும் சீரகத்தை மைய அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணையை விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதக்கியதும் அரைத்த மசாலாவை சேர்த்து சிறிது உப்பு சேர்த்துத் திறந்தே வைத்து 5 நிமிடம் வதக்கவும்.
இவை நன்றாக வதக்கி லேசாக எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
சுவையான குடமிளகாய் கறி தயார். இதை ரைஸ், சப்பாத்தி, நூடுல்ஸ், பரோட்டா மற்றும் பிரட் ஆகியவற்றோடு பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum