புடலங்காய் கூட்டு
Page 1 of 1
புடலங்காய் கூட்டு
தேவையான பொருள்கள்:
புடலங்காய் = அரை கிலோ
துவரம் பருப்பு = 100 கிராம்
பெருங்காயம் = சிறிதளவு
மஞ்சள் பொடி = சிறிது
வெங்காயம் = 2
பச்சை மிளகாய் = 4
தக்காளி = 2
தேங்காய் துருவல் = 4 ஸ்பூன்
மிளகாய் வற்றல் = 2
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
புடலங்காயை விதை நீக்கிவிட்ட பின் மெல்லிய வளையங்களாக அரியவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி அரிந்து கொள்ளவும்.
துவரம் பருப்பை மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து குழைய வேக விட்டுக் கடைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும்.
அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் அரிந்த புடலங்காயை சேர்க்கவும். இதனோடு உப்பு சேர்த்துக் கிளறி மூடி வேக விடவும்.
சரியாக 5 நிமிடம் கழித்துத் திறந்து தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து கிளறி பரிமாறவும்.
சுவையான புடலங்காய் கூட்டு தயார். இதை ரைஸ் மற்றும் சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றோடு பரிமாறலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum