பயத்தம் பருப்பு சாம்பார்
Page 1 of 1
பயத்தம் பருப்பு சாம்பார்
தேவையான பொருள்கள்:
பயத்தம் பருப்பு = 200 கிராம்
மஞ்சள் பொடி = சிறிதளவு
இஞ்சி = காலங்குலம்
சின்ன வெங்காயம் = 100 கிராம்
தக்காளி = 2
புளி = அரை எலுமிச்சை அளவு
மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
தனியா பொடி = அரை ஸ்பூன்
தேங்காய் துருவல் = 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் = 3
கடுகு = 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
பயத்தம் பருப்புடன், தோல் நீக்கி தட்டிய இஞ்சி, மஞ்சள் பொடி, தக்காளி சேர்த்து குக்கரில் வைத்து வேக விட்டுக் கொள்ளவும். சின்ன வெங்காயம் உரித்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும்.
குக்கரில் வெந்த பருப்போடு சின்ன வெங்காயம், மிளகாய் பொடி, தனியா பொடி, உப்பு சேர்த்து மூடி கொதிக்க விடவும்.
கொதித்துப் பொடி வாசனை அடங்கியதும் கரைத்த புளி அரைத்த தேங்காய் சேர்த்து மீண்டும் 2 நிமிடம் மூடி கொதிக்க விடவும்.
அடுத்து எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்துத் தாளித்து கீறிய பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கி கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொட்டவும். கொத்தமல்லி இலை தூவவும்.
சுவையான பயத்தம் பருப்பு சாம்பார் தயார். இதை ரைஸ், இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், ஆப்பம், சப்பாத்தி ஆகியவற்றோடு பரிமாற சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
பயத்தம் பருப்பில் பொட்டாசியம் , ஸ்டார்ச், புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. செரிமானத்திற்கும் எளிதாக உள்ளன
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பயத்தம் பருப்பு சாம்பார்
» பயத்தம் பருப்பு சாம்பார்
» பயத்தம் பருப்பு சாம்பார்
» பயத்தம் பருப்பு சாம்பார்
» பயத்தம் பருப்பு தோசை
» பயத்தம் பருப்பு சாம்பார்
» பயத்தம் பருப்பு சாம்பார்
» பயத்தம் பருப்பு சாம்பார்
» பயத்தம் பருப்பு தோசை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum