ஹைத்ராபாதி குருமா
Page 1 of 1
ஹைத்ராபாதி குருமா
தேவையான பொருள்கள்:
காலிஃப்ளவர் = 1 சிறியது
தக்காளி = கால் கிலோ
வெங்காயம் = 50 கிராம்
நறுக்கிய கேரட், பீன்ஸ், பீட்ரூட் = 50 கிராம்
கசகசா = 2 ஸ்பூன்
இஞ்சி = 1 அங்குலம்
புளி = அரை எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் = 10
மிளகு = 2 ஸ்பூன்
நெய் = 2 ஸ்பூன்
ஏலக்காய் = 3
கிராம்பு = 3
பிரிஞ்சி இலை = 1
சோம்பு = அரை ஸ்பூன்
எண்ணெய் = 4 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
காலிஃப்ளவரை வெது வெதுப்பான வெந்நீரில் உப்பு சேர்த்து அலசவும். காய்கறிகளை நறுக்கிக் கொண்டு, வெங்காயம் உரித்துக் கொள்ளவும். இஞ்சியை பொடியாக நறுக்கவும்.
எண்ணெயில் மிளகாய் வற்றல், தனியா வறுக்கவும். புளியையும் வறுத்துக் கொள்ளவும். இவற்றை அரைத்துக் கொள்ளவும். கசகசாவையும், மிளகையும் லேசான தீயில் வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்யவும். கிராம்பு, சோம்பு, ஏலக்காய் இவற்றை லேசாகத் தட்டிக் கொள்ளவும்.
எண்ணெய், நெய் இரண்டையும் சேர்த்து காய விட்டு தட்டிய மசாலா பொருள்கள், பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனோடு நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி கொதிக்க விடவும். கொதித்து காய்கள் வெந்ததும் பொடி செய்த கசகசா, மிளகு பொடியைத் தூவி 1 பிடி புதினாவை சேர்க்கவும்.
சுவையான ஹைத்ராபாதி குருமா தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பூரி, நூடுல்ஸ், அடை, ஆப்பம், பிரியாணி, வெஜிடபிள் ரைஸ், இட்லி, தோசை போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
காலிஃப்ளவரில் வைட்டமின் B, C, மற்றும் K உள்ளது. குறைந்த அளவு கலோரி, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் உயர் ஃபைபர் கொண்டது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சிறுநீரகம் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும். வாய்வு தொல்லைகள் குறையும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum