நடிகை சோனாவுக்கு ஆதரவாக நடிகர் எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு
Page 1 of 1

கவர்ச்சி நடிகை சோனா, பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகனும் தயாரிப்பாளருமான எஸ்.பி.பி. சரண் மீது பாலியல் புகார் கூறினார். தனது நண்பர் வைபவ் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொள்ள சென்றிருந்த போது, அங்கு எஸ்.பி.பி. சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடமும், தி.நகர் போலீசிலும் சோனா புகார் அளித்தார்.
நடந்த சம்பவத்துக்கு சரண் தன்னிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையெனில் அவரை சும்மா விட மாட்டேன் என்று சோனா கூறினார். எஸ்.பி.பி. சரண் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சியை சோனா ஏற்க வில்லை. எஸ்.பி.பி. சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
இதனால், இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவித சமரசமும் ஏற்படவில்லை. நாளுக்கு நாள் இவர்களது விவகாரம் வளர்ந்து கொண்டே செல்கிறது. விட்டுக் கொடுப்பதில்லை என்பதில் சோனாவும், சரணும் பிடிவாதமாக உள்ளனர்.
இதற்கிடையே, விருந்தில் எஸ்.பி.பி. சரண் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதற்கு தன்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது என்று சோனா அறிவித்துள்ளார். அந்த வீடியோ ஆதாரத்தையும் போலீசிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, இந்த விவகாரம் மேலும் சூடி பிடிக்க தொடங்கி உள்ளது. போலீசார் தன்னை கைது செய்யக்கூடும் என்பதால், எஸ்.பி.பி. சரண் கோர்ட்டை அணுகி இடைக்கால முன் ஜாமீன் பெற்றுள்ளார்.
தன்னிடம் தவறாக நடந்து கொண்ட எஸ்.பி.பி. சரண் 10 நாட்களுக்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சோனா கெடு விதித்து இருந்தார். அந்த கெடு கடந்த வெள்ளிக்கிழமையுடன் (23-ந்தேதி) முடிவடைந்தது. ஆனால், எஸ்.பி.பி. சரண் மன்னிப்பு கேட்காததால், சோனா பெண்கள் அமைப்பின் ஆதரவை நாடியுள்ளார்.
பெண்கள் அமைப்பும் சோனாவுக்கு ஆதரவாக களத்தில் குதிக்க தீர்மானித்துள்ளன. எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம் நடத்த பெண்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.
இதுபற்றி, ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்க தலைவி கல்பனா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சோனா ஒரு நடிகையாக இருக்கலாம். அதற்காக, எஸ்.பி.பி. சரண் அவரை ஆபாசமாக திட்டி இருக்கக் கூடாது. சோனா ஒரு பெண். அவருக்கும் கவுரவம் உள்ளது.பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். சோனா தனது புகாருக்கான ஆதாரங்களை போலீசில் அளித்துள்ளார். அவருக்கு எதிராக பாலியல் கொடுமை நடந்து இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது. எனவே தான் நாங்கள் சோனாவுக்கு ஆதரவு அளிக்க முன் வந்துள்ளோம்.
எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு 500 பெண்கள் திரண்டு கறுப்புக் கொடியுடன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. சோனாவுக்கு நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
இவ்வாறு கல்பனா கூறியுள்ளார்.
முன்னதாக நடிகை சோனா நிருபரிடம் கூறியதாவது:
எனது புகாருக்கான ஆதாரங்களுடன் சென்று கமிஷனர் திரிபாதியை சந்தித்தேன். நான் புகார் அளித்துள்ள போலீஸ் நிலையத்தில் போய் ஆதாரங்களை ஒப்படைக்குமாறு அவர் என்னிடம் கூறினார். அதன்படி, வீடியோ, ஆடியோ மற்றும் எஸ்.எம்.எஸ். ஆதாரங்களை தி.நகர் போலீசில் அளித்தேன்.
சரண் மன்னிப்பு கேட்க இன்னும் வாய்ப்பு அளித்துள்ளேன். திங்கட்கிழமை வரை காத்திருப்பேன். அதன் பிறகும், மன்னிப்பு கேட்பதை சரண் தவிர்த்தால், கூடுதல் ஆதாரங்களை போலீசில் சமர்ப்பிப்பேன். வெங்கட்பிரபு, பிரேம்ஜி, வைபவ் போன்ற நண்பர்களையும் சாட்சிகளாக இதில் சேர்ப்பேன்.
இவ்வாறு சோனா கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விழாக்களில் ஆபாச உடை: நடிகை சோனாவுக்கு எதிராக நாளை கண்டன ஆர்ப்பாட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு
» மூவருக்குத் தூக்கு: நடிகர், நடிகைகள், வக்கீல்கள், மாணவர்களைத் திரட்டி போராட்டம் – பாரதிராஜா அறிவிப்பு
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» சோனாவுக்கு நடிகர் சங்கம் ஆதரவு
» இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கடலூரில் நாளை முழு அடைப்பு போராட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum