கோவை சரளாவின் மலரும் நினைவுகள்!
Page 1 of 1
கோவை சரளாவின் மலரும் நினைவுகள்!
திரையில் பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து கலகலப்பாக்கும் கோவை சரளாவிடம், “எல்லோரையும் சிரிக்க வைக்கிறீர்களே, உங்களை அசர வைத்த, நகைச்சுவை சம்பவம் நினைவிருக்கிறதா?” என்று கேட்டோம். புரோட்டா சூரி, ‘அங்காடித் தெரு’ பாண்டி கூட்டணியுடன் பொள்ளாச்சியில் ஷூட்டிங்கில் இருந்த கோவை சரளா தடாலடியாக, ‘சூப்பரான சமாசாரமுங்க’ என்றபடியே தொடங்கினார்.
கோயமுத்தூர்ல, எங்க வீட்டிற்குப் பின்னால் கொஞ்ச தூரம் போனால் பெரிய தோப்பு இருக்கும். அவ்வளவு பெரிய தோப்பிற்கும் ஒரே பெரியவர்தான் காவல்காரர். எனக்கும் என்னோட ஃப்ரெண்ட்ஸூக்கும் தினமும் இளநீர் குடிப்பதற்கு ஆசை! ஆனால் மரமேறுவது யார்? எல்லோரும் சேர்ந்து நீ தான் இங்க இருப்பதிலயே சூப்பர் ஹைட். உன்னாலதான் அலேக்கா மரமேற முடியும், அப்படி, இப்படின்னு என்னை உசுபேத்தி விட்டுடுவாங்க.
சரி ஒரு கை பார்க்கலாம் என்று நானும் அருவாள், கயிறு சகிதமா மரமேறத் தொடங்கி விடுவேன். சத்தமேயில்லாமல் கோழி கழுத்தைப் பிடித்து திருகிற மாதிரி, இளநீரை லாவகமாக பிடுங்கி கீழே போடுவதில் எக்ஸ்பர்ட்டே ஆகிவிட்டேன். இப்படித்தான் ஒரு நாள் நான் மரமேறி ஒவ்வொரு இளநீராகப் பிடுங்கி கீழே போட்டுக்கொண்டே இருந்தேன். ‘ஏன்டி போதுமா?’ன்னு கேட்டேன். அதுக்கு ஒரு வாண்டு சத்தம் போட்டு ‘இன்னும் பிடுங்கிப் போடுக்கா’ன்னு கத்திட்டா.
சத்தம் கேட்டு காவல்காரர் வந்தேவிட்டார். அவ்வளவுதான் அத்தனை பேரும் ஜூட். ஓடிப் போய் ஒரு குழிக்குள் மறைந்து உட்கார்ந்து விட்டார்கள். காவல்காரர் கீழே இளநீர்க் குலைகள் இருப்பதைப் பார்த்ததும் “யாராவன்?, ஓ! இப்படிதான் தினமும் இளநீர் காணாமப் போகுதா? முந்தா நாள் 50 இளநீர் காணாமப் போனது உங்க வேலைதானா?” என்று சத்தம் போட்டார். எல்லோரும் மூச்சு விடாமல் மறைந்து கொண்டிருக்கும் போது, அந்த வாண்டு மட்டும் “அக்கா நாம நேத்துதானே இளநீர் போட்டோம், அதுவும் நாலு இளநீர்தானே! இந்தாளு ஐம்பது இளநீர் காணோம்கிறான்” என்று சத்தமாக சொல்லி விட்டாள்.
அவ்வளவுதான், குரல் வந்த திசையில் போனவர் மூன்று பேரையும் பிடித்து விட்டார். முதுகில் நாலு சாத்து சாத்தினார். வலி பொறுக்க முடியாமல் அந்த வாண்டு, “எங்களை மட்டும் அடிக்கிறீங்க, மேலே உட்கார்ந்து இருக்கிறவங்களை ஒண்ணும் பண்ண மாட்டீங்களா?” என்றார். அப்போதுதான் மேலே அண்ணாந்து பார்த்தவர், “நீதான் இவங்களுக்கு தலைவியா, மரியாதையாக கீழே வா” என்று மிரட்ட, மெதுவாக கீழே இறங்கி வந்தவள் பி.டி. உஷா ரேஞ்ச்சுக்கு எடுத்தேன் ஓட்டத்தை, அதுக்கப்புறம் இளநீர் குடிக்கிற ஆசையே போயிருச்சு.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரோஜா முதல் ராவண் வரை… புத்தகமாய் மலரும் ரஹ்மானின் நினைவுகள்!
» மலரும் மலர்
» மலரும் அறிவியல்
» மலரும் உள்ளம் -2
» மலரும் மொட்டுக்கள்
» மலரும் மலர்
» மலரும் அறிவியல்
» மலரும் உள்ளம் -2
» மலரும் மொட்டுக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum