தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுந்தர்.சிக்கு அல்வா கொடுத்த வடிவேலு!

Go down

சுந்தர்.சிக்கு அல்வா கொடுத்த வடிவேலு! Empty சுந்தர்.சிக்கு அல்வா கொடுத்த வடிவேலு!

Post  ishwarya Fri Apr 12, 2013 1:09 pm



திமுகவுக்கு ஆதரவாகவும், விஜயகாந்துக்கு பதிலடி கொடுக்கிறேன் என்ற வீராப்போடும்,

கடந்த தேர்தலில் திமுகவுக்கு ஆதவாக பிரச்சாரம் செய்து, வம்பில் மாட்டிக் கொண்டார் வடிவேலு.

தேர்தல் முடிவுக்கு பின்னர் தமிழ்நாட்டில்தான் வடிவேலு இருக்கிறாரா என்ற நிலைமைக்கு ஆளாகியுள்ள வடிவேலு, கிட்டத்திட்ட தலைமறைவு வாழ்கைதான் நடத்துகிறார். முக்கியமாக தேர்தல் முடிவுக்கு பின்னர் படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தனது சொந்தப் படத்தை தொடங்க நினைத்தார்.

அங்கேதான் அவருக்கு அடி! 25 கெட் அப்புகள் போடவேண்டிய அந்தப் படத்தை பத்து கோடிக்கு குறைந்து தயாரிக்க முடியாது என்ற நிலை. இதனால் அந்தப் படம் டிராப்.

இந்த நேரத்தில்தான் சுந்தர்.சி நடிப்புத் தொழிலை விட்டு விட்டு, இயக்கத்தை மட்டும் கவனிக்கலாம் என்று முடிவு செய்து தொடங்கிய படத்தில் வடிவேலுவை சம்பளம் இல்லாமல் நடிக்க வரும்படி அழைத்தாராம் சுந்தர். சி. அதாவது படம் வியாபாரம் ஆனதும் 25 லட்சம் சம்பளம் தருகிறேன் எனது பத்துநாள் கால்ஷீட் போதும் என்றாராம்.

ஆனால் இருமணிநேர கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கி வந்த வடிவேலு, முதலில் இதற்கு ஒப்புக்கொண்டாலும், பிறகு வடிவேலுவின் அடிபொடிகள் “ அண்ணே! உங்க ரூட்டை மாத்தாதீங்க” என்று கொடுத்த அட்வைஸில் “ சாரி பங்களாளி “ சொல்லிவிட்டு, வடிவேலுவே பின் வாங்கிவிட்டாராம். இதை சற்றும் எதிர்பார்க்காத சுந்தர்.சி அவசரமாக தனது மீடியா நண்பர்களை அழைத்து” என்னுடைய படத்தில் வடிவேலு நடிக்கவே இல்லை, அதுவெறும் வதந்தி தான் என்று செய்திபோடுங்கள்” கேட்டுக்கொண்டாராம் சுந்தர்.சி.

உண்மையில் தொலைகாட்சி சேனல்களில் வடிவேலு நடித்த நகைச்சுவை காட்சிகள் போடப்பட்டால் , நல்ல டி.ஆர்.பி கிடைக்கிறது. இன்னும் வடிவேலுவுக்கு மவுசு குறையவில்லை என்கிறார்கள் சின்னத்திரை வட்டாரத்தில். இது தெரிந்ததால்தானோ என்னவோ வடிவேலுவின் தில்லு இன்னும் குறைந்தபாடில்லை!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» “டிவி சேனலுக்கு அல்வா கொடுத்த சோனாலி
» ரஜினி படத்தை 60 முறை பார்த்த சிக்கு புக்கு நடிகை!
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் ‘ஆப்பிரிக்காவில் வடிவேலு’
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum