அதிசய நூபுர கங்கை
Page 1 of 1
அதிசய நூபுர கங்கை
மதுரையை அடுத்த அழகர்கோவில் அமைந்துள்ள அழகர்மலை உச்சியில் என்றுமே வற்றாத அதிசய நூபுர கங்கை பாய்கிறது. மலையில் தவழ்ந்து ஓடிவரும் இந்த நூபுர கங்கை, சிறு பாதை வழியாக வெளியே கொட்டுகிறது. மிகுந்த சுவை கொண்ட இந்தப் புனித நீரை பக்தர்கள் அருந்துகிறார்கள்.
மலையில் இருந்து வரும்போது அபூர்வ மூலிகைகள் மீது பட்டு வருவதால் இந்த நீர் அருமருந்தாகக் கருதப்படுகிறது. நூபுரகங்கை நீர் மற்றொரு பாதைவழியாக ஒரு தொட்டியில் வந்து சேர்கிறது. அந்தத் தண்ணீரை எடுத்து பக்தர்கள் நீராடுகிறார்கள்.
இதில் தொடர்ந்து 15 நாட்கள் நீராடினால் தீராத நோய்கள், வினைகள் விலகிச் செல்லும் என்கிறார்கள். நூபுரகங்கை நீர் அழகருடைய திருமஞ்சனத்திற்கும், அபிஷேக பூஜைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. வேறு தீர்த்தத்தில் நீராடினால் சிலை கறுத்து விடும் என்கிறார்கள்.
திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம் என்கிற வரிசையில் அழகர் கோவிலின் பிரசாதம் சம்பா தோசை. நூபுரகங்கை தீர்த்தத்தில் இது தயாராவது சிறப்பு. அதன் தனிச்சுவைக்கும் நூபுரகங்கை தண்ணீரே காரணம்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» அதிசய நூபுர கங்கை
» எல்லோருக்கும் புண்ணியம் கங்கை
» கங்கை கங்கை கங்கை
» வால்காவிலிருந்து கங்கை வரை
» ஆகாய கங்கை
» எல்லோருக்கும் புண்ணியம் கங்கை
» கங்கை கங்கை கங்கை
» வால்காவிலிருந்து கங்கை வரை
» ஆகாய கங்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum