தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராணாவை மறுத்த பசுபதி

Go down

ராணாவை மறுத்த பசுபதி Empty ராணாவை மறுத்த பசுபதி

Post  ishwarya Thu Apr 11, 2013 5:14 pm

ராணா படம் டிராஃப்… ரஜினியால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நடிக்க முடியாது என்றெல்லாம் வெளியான செய்திகளை பொய்யாக்கியிருகிறார் சௌந்தர்யா ரஜினி. “ அப்பா முழுவதும் குணமாகி விட்டார்.

ராணாவில் நடிக்க முழு உடல் தகுதி பெற்றுவிட்டார்” என்று பேட்டி கொடுத்து ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, ராணாவில் அசத்தலாக செந்தமிழ் பேசத்தெரிந்த ஒரு முக்கிய கதாபாத்திரம் கதையில் வருகிறது என்றும் அதில் நடிக்க பசுபதியையே ரஜினியே மீண்டும் பரிந்துரை செய்ததாகவும் இயக்குனர் ரவிகுமார் வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைக்கிறது.

ஆனால் இயக்குனர் ரவிகுமாரையும், ரஜினியையும் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து, இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது. அடுத்த இரண்டாண்டுகளில் மூன்று படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு ஒப்பந்ததில் கையெழுத்துப் போட்டு விட்டேன். என்னை நம்பி முதலீடு செய்ய முன்வந்தவர்களை நான் சோர்வடையச் செய்ய விரும்பவில்லை என்று அன்புடன் கேட்டுக் கொண்டாராம்.

பசுபதி தரப்பில் அவர் படங்கள் ஒப்புகொண்டிருப்பது உண்மையா? அரவான் படத்தில் நடித்த இந்த ஒன்றை ஆண்டு காலத்தில் அவர் படங்கள் எதுவும் ஒப்புக்கொள்ள வில்லையே என்றால், அரவான் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்ததும் மூன்று படங்களை ஒப்புக்கொண்டு இருகிறார்.

தூள், மஜா படங்களுக்கு பிறகு விக்ரமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். இது விக்ரமுக்கு இணையான கதாபாத்திரம். ஆனால் வில்லன் ரோல் அல்ல. அதேபோல TN 07 AL 4777 ரீமேக் படத்தை இயக்கிய லஷ்மி காந்தன் அடுத்து இயக்கும் படத்தில் பசுபதிதான் லீட் ஹீரோ. இன்னோரு ஹீரோவும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

மூன்றாவதாக ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்க இருக்கும் ஒரு ஆஃப் பீட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் பூர்வாங்கமாக ஒப்புக்கொண்டு விட்டார். இதனால்தான் ராணா வாய்ப்பை அவரால் ஏற்கமுடியவில்லை என்கிறார்கள் பசுபதியின் நட்பு வட்டத்தில்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum