தவற விட்ட வாய்ப்புகளுக்காக வருத்தப்படலை – த்ரிஷா
Page 1 of 1
தவற விட்ட வாய்ப்புகளுக்காக வருத்தப்படலை – த்ரிஷா
திரையுலகில் பத்து வருடங்களை தொடப்போகும் த்ரிஷாவை ஒரு இனிய வேளையில் சந்தித்தபோது,,,,,
உங்களுக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்துவிட்டன என்பது உண்மைதானே?
அப்படிச் சொல்லிட முடியாது. சினிமாவுக்கு வந்து 9 வருஷம் ஆயிடுச்சு. ‘ஒரு கதை இருக்கு நடி’ன்னு நேத்துதான் ப்ரியதர்ஷன் சார் போன் பண்ணின மாதிரி இருக்கு.
இந்த 9 வருஷம் அப்பா, அம்மா, ஃப்ரெண்ட்ஸ்.. ஏன் எனக்கே டைம் ஒதுக்க முடியாமல் பிஸியா இருந்திருக்கேன். எல்லா வித கேரக்டர்களும் செய்து முடிச்சிருக்கேன். முதல் வரிசை ஹீரோக்கள் முதல் எல்லோருடனும் நடிச்சிருக்கேன். முன்னணி இயக்குநர்கள் என் கால்ஷீட்டுக்காக வெயிட் பண்ணியிருக்காங்க. இப்போ படங்கள் இல்லாததற்கு நானேதான் காரணம். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ன்னு ஒரு படம் என் கேரியரை யோசிக்க வெச்சது. இனி அது மாதிரியே படங்கள் செய்யலாம்ன்னு முடிவு எடுத்துட்டேன்.
த்ரிஷா என்றால் என்ன அர்த்தம்?
என் பாட்டிக்கு நாவல்கள் படிக்கும் பழக்கம் உண்டு. அப்படி அவர் படித்த ரஷ்ய நாவலில் வந்த ஒரு கேரக்டரின் பெயர்தான் த்ரிஷா. அவர் நம்ம ஊர் ஜான்சிராணி மாதிரி வீர மங்கையாம். சூது செய்து மற்றவர்கள் வீழ்த்தும்போதெல்லாம் அதிலிருந்து மீண்டு சாதுர்யமாக வெற்றி கொள்பவராம் த்ரிஷா.
அந்த பாதிப்பில்தான் இந்தப் பெயரை சூட்டியிருக்கிறார் என் பாட்டி. இது ரொம்ப நாளாக எனக்குத் தெரியவில்லை. ஃப்ரெண்ட்ஸ், மீடியான்னு யாராவது கேட்கும்போதெல்லாம் பதில் சொல்லத் தெரியாமல் விழிப்பேன். இப்போதான் அந்த விஷயத்தை என் அம்மா சொன்னார். இப்போதும் த்ரிஷாவுக்கு அர்த்தம் தெரியவில்லை. ஆனால் அவள் வீரமங்கை என்பதால், வெற்றி என்று அர்த்தம் கொடுத்துக்கலாம்.
ஒரு சினிமாவின் வெற்றியில் நடிகையின் பங்கு என்ன என்பது இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்குமே?
ஆக்ஷன், காதல், சென்டிமெண்ட்ன்னு எல்லா கதைகளுக்கும் நடிகை நிச்சயம் தேவை. ஆக்ஷன் படம்ன்னா அதுக்கு ஹீரோயிஸம் மட்டும்தான் தேவையா இருக்கும் என நினைக்கக் கூடாது. ‘சாமி’ன்னு ஒரு படம். முழுக்க முழுக்க ஹீரோயிஸம் உள்ள கதை. ஆனால் நானும் அதில் பேசப்பட்டேன். அதே மாதிரி ‘பீமா’, ‘திருப்பாச்சி’ன்னு நிறைய படங்கள் இருக்கு. ஆனா வெற்றிக்கு நடிகை மட்டுமே முக்கியம்ன்னு நான் சொல்ல வரலை.
தவற விட்ட வாய்ப்புகளுக்காக வருத்தம் அடைந்தது உண்டா?
இங்கு எல்லாமும் நடக்கலாம். நமக்கு சரியா வராதுன்னு விட்ட படம் இன்னொருத்தருக்கு ஒர்க் அவுட் ஆகியிருக்கலாம். நினைச்ச மாதிரியே ஃப்ளாப் ஆகியிருக்கலாம். ஆனா எனக்கு அது மாதிரி நடக்கலை. தவற விட்ட வாய்ப்புகளுக்காக வருத்தப்படலை. அப்படி ஒரு நல்ல சினிமாவை நான் விட்டு விடவும் மாட்டேன்.
கமல்ஹாசனுடன் நடித்த அனுபவம்? அவர் பேசிய ரகசியம் ஒன்று?
நல்ல அனுபவம். அவர் ரகசியம் எதுவும் சொல்லவில்லையே…
உங்களுக்குப் பிடித்த நடிகை, ஏதாவது ஒரு காட்சியில் அவரது நடிப்பு பற்றி?
சிம்ரன். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்துல குழந்தை கீர்த்தனாவை அழைச்சிக்கிட்டு நந்திதா தாஸை சந்திக்கப் போவாங்க. அந்த இடத்தில் அவங்க பரிமாறிக்கிற வார்த்தைகள், காட்டுகிற அன்பு, பரிதாபம்ன்னு ஒரே சீனில் எல்லாம் இருக்கும். அந்த இடம் ரொம்பவும் ஃபீல் பண்ண வைக்கும். அவங்க கொடுத்த ஃபீல் வேறு யாரும் தர முடியாது. அவங்கதான் அதுக்குப் பொருத்தம். ஐ லவ் சிம்ரன்!
மறக்க முடியாத நாட்கள் எல்லோருக்கும் இருக்கும். உங்களுக்கும் இருக்கும்தானே?
அப்படி ஒருநாள் எனக்கும் இருக்கு. அந்த நாளுக்கு அப்புறம் எல்லாம் மாறிடுச்சுன்னு சொல்ற மாதிரிதான் அந்த நாள்ல எல்லாமே நடந்தது. ஒன்று நடந்தா அது நல்லதா கெட்டதான்னு பிரிச்சுப் பார்த்து யோசிக்க ரொம்ப நாள் ஆகும். அப்போதெல்லாம் அந்த நாளுக்காக சந்தோஷமோ, வருத்தமோ பட்டுட்டு வேலையை பார்க்கப் போயிடுவோம். இப்ப அந்த நாளை நினைச்சுப் பார்க்கும்போது ஆனந்தமா இருக்கு.
மிஸ் சென்னையாக திரி’‘வுக்கு மகுடம் சூட்டப்பட்ட நாள்தான் அது. இனி வரும் காலங்களுக்கும் இப்ப இருக்கும் வாழ்க்கைக்கும் அந்த ஒரு நாள்தான் காரணம். எத்தனையோ பேர் இருந்தப்போ என்னை ஏன் மிஸ் சென்னையாக தேர்ந்தெடுத்தாங்க?
ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு இதுவரை வரவில்லையே?
‘ஜக்குபாய்’ வாய்ப்பு வந்தது. நானும் ஆர்வமா இருந்தேன். பிஸியான கால்ஷீட்டால நான் நடிக்க முடியாமல் போனது. அப்புறம் ரஜினி சாரே அதுல நடிக்கலைன்னு சொன்னாங்க. இன்னொரு படத்துல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடும் வாய்ப்பு. அப்பவும் என்னால முடியலை.
கனவு கேரக்டர் என்று எதாவது இருக்கிறதா?
இருக்கு! நான் உங்ககிட்ட பேசும் போது நல்ல பொண்ணா நடந்துப்பேன். உங்களுக்குப் பிடிச்ச மாதிரி பேசுவேன். இந்தப் பொண்ணு நல்ல பொண்ணுன்னு நீங்களே நம்புற மாதிரி மாறிடுவேன். ஆனா நீங்க போன பின் என் கேரக்டர் வேறு மாதிரி இருக்கும்.
இப்படி உள்ளே ஒருத்தியாகவும் வெளியே ஒருத்தியாகவும் ஒரு கேரக்டர் செய்யணும்னு ஆசை. அப்புறம் ‘படையப்பா’ படத்துல வந்த ரம்யா கிருஷ்ணன் கேரக்டரில் ஒரு படம் முழுதும் அசத்தணும். கனவு கேரக்டர் எதுவும் இன்னும் எனக்கு கிடைக்கலைன்னு சொல்லலை. இது மாதிரி கிடைச்சா நல்லா இருக்கும்.
யார் இயக்கத்தில் நடிக்க ஆசை?
ப்ரியதர்ஷன், மணிரத்னம்ன்னு எல்லோரின் இயக்கத்திலும் நடிச்சுட்டேன். இதுவரை என்னை இயக்காத எல்லா இயக்குநர்களின் படங்களிலும் நடிக்கணும்.
நீங்கள் அமைதியாக இருந்தாலும், விக்கிலீக்ஸில் வருவதுபோல பரபரப்பான கிசுகிசுக்கள் உங்களைப் பற்றி வந்துகொண்டேயிருக்கிறதே?
நடிகை என்ற ஒரு விஷயம் என்னை அப்படி மாற்றி வைத்திருக்கிறது. சினிமாவில் இல்லாமல் நானும் ஒரு பொது ஜனமாக இருந்திருந்தால் இதையெல்லாம் யாரும் பரப்பி விடப் போவதில்லை. நான் கண்டு கொள்ளப்படாத ஆளாக இருந்திருப்பேன்.
சினிமா, அரசியல், விளையாட்டு இந்த மூன்று தரப்பு ஆட்களும் இதில் சிக்காமல் இருக்க முடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்ட பின்னாடி, கிசுகிசுக்கள் என்னை ஒண்ணும் செய்யலை. கோபம் வந்திருந்தால், முதல் கிசுகிசுக்கே நான் சினிமாவில் இருந்து விலகி போயிருப்பேன்.
நடித்ததில் பிடித்தது?
‘சாமி’, ‘அபியும் நானும்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’.
மிகக் குறைந்த காட்சிகள் இருந்தும் அஜித் படம் என்பதால்தானே ‘மங்காத்தா’வில் நடித்தீர்கள்?
இல்லை. கதை சொல்லும்போதே ‘இதுதான் உங்க கேரக்டர். இத்தனை சீன்தான் இருக்கு. ஆனா நல்ல ஸ்கோப் இருக்கும். நீங்களும் படத்துக்கு முக்கியம்’ன்னு சொன்னார் வெங்கட்பிரபு. இதுக்கு முன்னாடி அஜித்துடன் நான் ஜோடி சேர்ந்த ‘கிரீடம்’, ‘ஜி’ இரண்டு படங்களும் சரியாப் போகலை. அதில் கொஞ்சம் வருத்தம் இருந்துச்சு. இப்போ நாங்க வெற்றிப்பட ஜோடியாக மாறிட்டோம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘ஈ’யை விரட்டி விட்ட ஜுலாயி!
» விமலை புலம்ப விட்ட படாதிபதிகள்!
» ‘ராசியாகி விட்ட’ ரஜினி – ரஹ்மான்!
» அரைத்து விட்ட வெங்காய சாம்பார்
» டைரக்டர்களை டீலில் விட்ட தனுஷ்!
» விமலை புலம்ப விட்ட படாதிபதிகள்!
» ‘ராசியாகி விட்ட’ ரஜினி – ரஹ்மான்!
» அரைத்து விட்ட வெங்காய சாம்பார்
» டைரக்டர்களை டீலில் விட்ட தனுஷ்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum