தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

“ரா.1″ படத்தில் அசத்துகிறார் ரஜினிகாந்த்

Go down

“ரா.1″ படத்தில் அசத்துகிறார் ரஜினிகாந்த் Empty “ரா.1″ படத்தில் அசத்துகிறார் ரஜினிகாந்த்

Post  ishwarya Thu Apr 11, 2013 1:35 pm

கௌரி கான் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் “ரா.1″. இதை இயக்கியுள்ளார் அனுபவ் சின்ஹா. ஷாரூக் கான், கரீன கபூர் மற்றும் அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இது இந்திய அளவில் மிக அதிகமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படம் என கூறப்படுகிறது. இதில் நிறைய சிறப்பு அம்சங்கள் நிறைந்துள்ளன.

மிக சிறப்பு அம்சமாக கருதப்படுவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்று நடித்த கௌரவ வேடம் தான். ஒரு சில மாதங்களுக்கு முன் ரஜினி உடல்நலம் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மெதுவாக உடல்நலம் தேறிவரும் காரணத்தால் “ரானா” படத்தின் ஷூடிங்கைக் கூட தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கின்றனர். இந்த நிலையில் தான் “ரா.1″ படத்தில் இந்த கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

இதனால் அவரது ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷம். இந்த தீபாவளிக்கு, ரஜினியின் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. எவ்வளவு தான் ரஜினியின் உடல் தேறிவருகிறது என்ற செய்திகள் வந்தாலும், அவரை மீண்டும் திரையில் கண்ட பின்பு தான் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு திருப்தி கிடைத்துள்ளது. அவர் ஒரு சில சீன்களே வந்து அசத்தினாலும், ரஜினியின் ரசிகர்களுக்கு அந்த உற்சாகம் அளவற்றது.

மொத்தத்தில் ரஜினியின் இந்த கௌரவ தோற்றத்தால், பல தரப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum