தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூரிய வழிபாடு

Go down

 சூரிய வழிபாடு  Empty சூரிய வழிபாடு

Post  gandhimathi Sun Jan 20, 2013 1:45 pm




சூரிய வழிபாடு மிகவும் தொன்மையான வழிபாடு. நாம் நமது இரு கண்களாலும் பிரத்தியட்சமாகக் காண்பது சூரியனையேயாகும். சிவாலயங்களில் சூரிய பகவான் தனித்தும், நவக்கிரகங்களுக்கு நாயகனாகவும் வீற்றிருக்கின்றார். ஏனைய ஆலயங்களில் நவநாயகர்களுக்கு நடுநாயகனாக வீற்றிருப்பதை நாம் காண முடியும்.

சூரியன் எமக்கு வெளிச்சம், வெப்பம், சூடு, உஷ்ணம் ஆகியனவற்றைத் தருகின்றார். அதேபோன்று சூரிய வெப்பத்தால் கடல், ஆறு, குளம் முதலானவற்றின் நீர் ஆவியாக மேலெந்து பின்னர் மழையாக பொழிகின்றது. இதனால் விவசாயம் மேம்படுகின்றது. நீர் விசையால் மின்சாரம் கிடைக்கின்றது.

எனவே நமது வாழ்வுக்கு நன்மைகள் கிடைக்கின்றன. நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சியைக் காண்கின்றது. எனவேதான் பன்னெடுங்காலமாக நமது முன்னோர் சூரியனை வழிபட்டு வந்தார்கள். சூரியன் யார்? அவர் சிவசூரியன். சிவபெருமானின் அஷ்மூர்த்தங்களில் ஒருவர்.

சிவபெருமானின் முக்கண்களில் ஞானக்கண்ணாக உள்ளவர். இதனால் சூரியனைச் சிவரூபமாக கொண்டு வழிபட்டு வருகின்றோம். சிவாலயங்களில் சிவசூரியனுக்கு தனிச்சந்நிதி உள்ளது. இச்சூரியனுக்கு பூஜைகள் செய்த பின்னரே ஏனைய பூஜைகள் செய்யப்படுகின்றன. அதேபோல எல்லா ஆலயங்களிலும் நவக்கிரக சந்நிதிதானத்தில் நடுநாயகனாக உள்ளவர் சூரியனே ஆவார்.

ஆவணி மாதத்தில் சூரியன் சிங்க ராசியிற் பிரவேசிக்கின்றார். இதனால் ஆவணி ஞாயிறு சூரியனுக்கான விரத நாளாகின்றது. ஒருவரின் ஜாதகப்படி அவருக்கு ஆயுள், வீரியம், இருதய பலம், துணிவு, தலைமைத்துவத் தன்மை என்பவனவற்றை கொடுப்பவர் சூரியனேயாவார்.

ஒருவரின் தந்தையினுடைய நிலைப் பாங்கை அவரின் ஜாதகத்திலிருந்தே அறிந்து கொள்ள முடியும். ஆகவே ஜாதகத்தில் சூரியனின் நிலை முக்கியமானதாகும். சிவசூரியனுக்கு ஒரு முகம். இரு கைகளில் வெண்டாமரையை வைத்திருக்கின்றார்.

ஏனைய இரு கரங்களும், அபய, வரத ஹஸ்தங்களாக உள்ளன. சூரியன் ஏழு குதிரைகளைப் பூட்டிய குதிரை வண்டியில் சஞ்சாரஞ் செய்வார் என்பது வேதவாக்கு. அவர் மாதுளம் பழ நிறத்தவர். இவ்வாறு விக்கிரக வடிவில் சூரியனை வழிபடும் நாம் தினமும் எமது இரு கண்களாலும் பார்க்கும் சூரியனை விரத அனுஷ்டானங்களுடன் வழிபடுவது வழக்கம்.

வேதியர்கள் அதாவது பிரமாணவர்கள் காலை, மத்தியானம், மாலை வேளைகளில் சந்தியாகாலமான இக்காலங்களில் சந்தியா வந்தனஞ்செய்வர். இங்கே சூரிய தர்ப்பணம் சிறப்பம்சம் கொண்டது. அத்தோடு 108, 1008 என்ற வகையில் காயத்திரி மஹா மந்திரங்களை அவர்கள் ஜபஞ் செய்வது மூவேளைச் சந்தியாகாலங்களிலேயாம்.

அதேபோன்று தினமும் ஹோமஞ் செய்து அக்கினியில் சூரியனைக் கண்டு வழிபாடுகள் தினமும் இவர்களாற் செய்யப்படுகின்றது. எனவே சூரிய வழிபாடு முதன்மையானது. எல்லோருக்குமே நன்மை பயக்கக்கூடியது. சிவதீட்சை பெற்றோரும் சந்தியாகாலங்களில் இவ்வாறு வழிபடுவது வழக்கம்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum