தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சினிமாவாகிறது ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறு!

Go down

சினிமாவாகிறது ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறு! Empty சினிமாவாகிறது ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறு!

Post  ishwarya Wed Apr 10, 2013 6:19 pm

விவேகானந்தரின் குருவான ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்படுகிறது. இந்த படத்துக்கு, `ஸ்ரீராமகிருஷ்ண தரிசனம் என்று பெயரிட்டுள்ளனர். விவேகானந்தர், ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சீடராக சேர்ந்த நிகழ்ச்சிகள், ராமகிருஷ்ணர் காளி தேவியை நேரில் கண்ட காட்சி, அற்புத சக்திகளை அவை அடைந்த விதம் ஆகியவற்றை சித்தரிக்கும் படம் இது.

பாலுமகேந்திரா அறிமுகம் செய்த சஷிகுமார், ஸ்ரீராமகிருஷ்ணராக நடித்துள்ளார். இவர், கன்னத்தில் முத்தமிட்டால், ஷாஜகான், திருப்பாச்சி, படிக்காதவன், தனம் ஆகிய படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர். இவருடன் டெல்லி கணேஷ், புதுமுகங்கள் அமரசிகாமணி, ரவீந்திரநாத், ராஜா, சுரஜ், கல்யாண்ஜி, லட்சுமி, அபீஷா பட், விஜிஷா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஆதிஷ் உத்ரியன் இசையமைத்துள்ளார்.

டைரக்டர் பி.கலாநிதி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தினை ஜி.என்.டி.விஷன் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஜி.என்.தாஸ், ஜி.ராம்தாஸ், எம்.ரவீந்திரா நேரு ஆகியோர் தயாரிக்கிறார்கள். ராமகிருஷ்ணர் வாழ்ந்த கொல்கத்தாவில் உள்ள கோவிலில் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளனவாம். விரைவில் இப்படம் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum