தியானமும் ஆன்மீக வாழ்வும்
Page 1 of 1
தியானமும் ஆன்மீக வாழ்வும்
தியானமும் ஆன்மீக வாழ்வும்
விலைரூ.300
ஆசிரியர் : கல்யாணி வெங்கட்ராமன்
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
Bookmarkபிடித்தவை
ஸ்ரீராமகிருஷ்ணா மடம், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 1240.)
சுவாமி யதீஷ்வரானந்தர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்து மூத்த துறவிகளில் ஒருவர். ஐரோப்பாவில் ஏழு ஆண்டுகளும், அமெரிக்காவில் 10 ஆண்டுகளும் வேதாந்தத்தைப் பரப்பி, பயிற்றுவிக்கும் உயர்ந்த பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் ஒருங்கே பெற்ற ஞானசீலர்.
குழப்பமும், சிக்கலும், துன்பங்களும் நிறைந்த வாழ்க்கைச் சூழலிலிருந்து விடுபட ஆசைப்படும் மனிதனுக்கு மன அமைதி தேவை; அந்த அமைதியில் தெளிவும் நிறைந்து காணப்பட வேண்டும். இத்தகைய மனத்தெளிவை தியானத்தின் மூலம் மனிதனால் பெற முடியும். தியானம் என்றால் என்ன? அதை எப்படிச் செய்ய வேண்டும்? அதற்கென உரித்தான விதிமுறைகள் என்ன? யோக நெறி மனிதனை எவ்வாறு மேன்மைப்படுத்துகிறது? இவை போன்ற பல வினாக்களுக்கு இந்தப் புத்தகத்தில் சுவாமி விடையளித்திருக்கிறார்.
பிரார்த்தனை, தியானம் ஆகியவை நம்மை, கடவுளுக்கு மிக அருகில் கொண்டு போய்ச் சேர்க்கும் சாதனங்களாகும். நம்மிடம் உள்ள இயல்பான ஆன்மிக ஆற்றலை விழிப்படையச் செய்து எழுச்சியூட்டும் திறன் தியானத்திற்கு மட்டுமே உண்டு என்பதை விளக்கும் சிறந்த நூல்.
இதை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ள கல்யாணி வெங்கட்ராமன் பாராட்டுகுரியவர். எளிய தமிழில் அரிய ஆன்மிக பொக்கிஷம்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» தியானமும் ஆன்மீக வாழ்வும்
» தியானமும் ஆன்மீக வாழ்வும்
» காமமும் தியானமும்
» தியானமும் திருமந்திரமும்
» தியானமும் மன அமைதியும்
» தியானமும் ஆன்மீக வாழ்வும்
» காமமும் தியானமும்
» தியானமும் திருமந்திரமும்
» தியானமும் மன அமைதியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum