தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிவத்தலங்கள்

Go down

சிவத்தலங்கள் Empty சிவத்தலங்கள்

Post  gandhimathi Sun Jan 20, 2013 1:21 pm



ஐந்து மன்றங்கள்:

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்தினை கூறலாம். அந்த ஐம்பெரும் மன்றங்கள் (அடைப்பு குறிக்குள் சபைகள்) அமைந்துள்ள இடங்கள் கீழே...

தில்லை- பொன் மன்றம் (கனகசபை),
திருவாலங்காடு - மணி மன்றம் (ரத்தின சபை),
மதுரை - வெள்ளி மன்றம் (ராஜ சபை),
திருநெல்வேலி -செம்பு மன்றம் (தாமிரசபை),
திருக்குற்றாலம் - ஓவிய மன்றம் (சித்திர சபை).

ஐந்து தாண்டவங்கள்:

சிவபெருமானின் ஐம்பெரும் தாண்டவங்கள் என்று அடையாளம் காட்டப்படும் இடங்கள் கீழே...

தில்லை- ஆனந்த தாண்டவம்,
திருவாரூர்- அசபா தாண்டவம்,
மதுரை - ஞானசுந்தர தாண்டவம்,
அவிநாசி - ஊர்த்தவ தாண்டவம்,
திருமுருகன் பூண்டி - பிரம தாண்டவம்.

முக்தி தரவல்ல தலங்கள்:

முக்தி தரவல்ல தலங்கள் என்று நான்கு தலங்கள் உள்ளது. அந்த தலங்கள் அமைந்துள்ள இடங்கள் கீழே...

திருவாரூர்- பிறக்க முக்தி தருவது,
சிதம்பரம் - தரிசிக்க முக்தி தருவது,
திருவண்ணாமலை - நினைக்க முக்தி தருவது,
காசி - இறக்க முக்தி தருவது.

சத்த விடங்கத் தலங்கள்:

வடமொழியில் "டங்கம்'' என்பது உளியைக்குறிக்கும். விடங்கம் என்றால் உளியால் செதுக்கப்பெறாத என்று பொருள். ஏழு திருத்தலங்களில் சிவபெருமான் விடங்கராக வீற்றிருக்கிறார். அந்த ஏழு திருத்தலங்கள் அமைந்துள்ள இடங்கள் கீழே... (அடைப்புக்குறிக்குள் இறைவனின் நடனம்)

திருவாரூர் - வீதிவிடங்கர் (அசபா நடனம்),
திருநள்ளாறு - நகரவிடங்கர் (உன்மத்த நடனம்),
திருநாகை கோரணம் என்கிற நாகப்பட்டிணம்- சுந்தரவிடங்கர் (வீசி நடனம்), திருக்காறாயில் என்கிற திருக்காரைவாசல் - ஆதிவிடங்கர் (குக்குட நடனம்), திருக்குவளை - அவனிவிடங்கர் (பிருங்க நடனம்),
திருவாய்மூர் - நீல விடங்கர் (கமல நடனம்),
திருமறைக்காடு என்கிற வேதாரண்யம் - புவனி விடங்கர் (கம்சபாத நடனம்).
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum