சிம்புவின் இன்னொரு பக்கம் ? – இது உண்மையா STR!!
Page 1 of 1

கர்ணனும் கவச குண்டலமும் போல சிம்புவும், வம்பும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்று கோடம்பாக்கத்தில் சான்றிதழ் தருவார்கள். இந்நிலையில் வின்னைத் தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு சிம்பு மாறிவிட்டார் மென்மையான மனிதராகிவிட்டார் என்று சொன்னார்கள். ஆனால் இப்போதைய நிலைமை அதுவல்ல! சிம்பு தன்னை மாற்றிக் கொள்ளவே இல்லை என்பதுதான் கண்கூடு என்கிறார்கள் செய்தியாளர்கள் வட்டத்தில்.
சிம்பு தான் இணைந்து வேலை செய்யும் எந்த இயக்குனரோடும் வம்பு பண்ணாமல் இருந்ததில்லை. கௌதம் மேனனிடம் கூட “ த்ரிஷாவுக்கும் எனக்குமான முத்தக்காட்சி இருந்தால் நன்றாக இருக்கும்” என்று குடைச்சல் கொடுத்துப் பார்த்தாராம். ஆனால் கௌதம் மசியவில்லை என்கிறார்கள்.
தற்போது நடித்து முடித்திருக்கும் ஒஸ்தி படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடந்தபோது “ தினசரி கிரிகெட் விளையாட வசதியாக மலை 5 மணிக்கு மேல் நடிக்க முடியாது” என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாராம் தரணியிடம். அதேபோல கோ படத்திலும் ” தமன்னாவை ஹீரோயினாக புக் செய்தால் இந்தப் படத்தில் நடிக்கிறேன்” என்று கே.வி.ஆனந்துக்கு கடைசி நேரத்தில் தலைவலி கொடுத்தார் என்கிறார்கள்.
பெரிய இயக்குனர்களே சிம்புவுடன் இந்தப் பாடு படுகிறார்கள் என்றால் , அறிமுக இயக்குனர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஏற்கனவே மன்மதன் படத்தின் கதையால் முருகன் என்கிற இயக்குனருக்கும் சிம்புவுக்கும் முட்டிகொண்டு, பிரச்சனை இயக்குனர் சங்கம் வரை வந்து சமாதானமானது.
தற்போது ஜி.டி.நந்து என்பவரை சிம்பு மிரட்டுவதாக எல்லோரிடத்திலும் அவர் புலம்பிக் கொண்டிருப்பதாக ஹாட் தகவல் நம் காதுகளை எட்டியது. வின்னைத்தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு கெட்டவன் படத்தில் நடிக்க இருந்தார் சிம்பு. இந்த கெட்டவன் என்கிற படத்தின் இயக்குனர்தான் ஜி.டி.நந்து.
அந்தப் படம் 15 நாட்கள் வளர்ந்த நிலையில் அப்படியே நிற்கிறது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் சிம்பு என்றும் இயக்குனர் நந்து என்றும் விளம்பரங்கள் வெளியிடப் பட்டன.. ஆனால், படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எல்லாமுமே இவரது தானாம்! இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எல்லாவற்றையும் தன்னுடையது என்று எழுதி வாங்கிக்கொண்டாராம், சிம்பு.
இந்தப் படத்தை பல நாட்களாக தொடங்காமல் விட்டு விட்டதால், இயக்குனர் தன் வாழ்க்கை எங்கேயும் நின்று விடக்கூடாதே என்று நடிகர் பரத்திடம் சொல்ல அவருக்கு கதை பிடித்துப் போக, சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிப்பில் கெட்டவன் படத்தை உருவாக்கக் நந்து ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த விஷயம் சிம்புவுக்கு தெரிந்ததும் சந்திரபிரகாஷ் ஜெயினிடம் பேசி “ கதை என்னுடையது “ என்று கதை விட்டு, படத்தை எடுக்காமல் செய்துவிட்டாராம்.
சிம்புவின் வம்பிலிருந்து தப்பிக்க ஆந்திராவுக்கு சென்று நடிகர் சிரஞ்சீவியின் மைத்துனர் மகனும் இளம் ஹீரோவான அல்லு அர்ஜுனிடம் கெட்டவன் கதையைச் சொல்லியிருக்கிறார் நந்து. அவருக்கு கதை பிடித்துப் போகவே சொந்தமாக தயாரிக்க முன்வந்திருக்கிறார். இந்த விஷயமும் சிம்புவுக்குத் தெரிந்ததும் அல்லு அர்ஜுனிடம் பேசி படத்தை எடுக்கவிடாமல் செய்து விட்டாராம், சிம்பு.
அதன்பிறகு நொந்துபோன இயக்குனர் நந்துவை அழைத்து சிம்பு மிரட்டியதாகவும் , நந்து செய்தியாளர்களிடம் தொலைபேசி வழியாக தெரிவிக்கிறார். என்னை சிம்புவிடமிருந்து காப்பாற்றுங்கள் என்று நெருக்கமான மீடியா நண்பர்களிடம் கதறி வருகிறார் நந்து! இந்த விவகாரத்தில் நந்து சொல்வது உண்மையா..சிம்பு பாடப்போகும் சிந்துதான் என்ன…?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum