தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எலுமிச்சை விளக்கேற்றும் முறை

Go down

எலுமிச்சை விளக்கேற்றும் முறை Empty எலுமிச்சை விளக்கேற்றும் முறை

Post  amma Fri Jan 11, 2013 2:07 pm

ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை பலி ஆகும். பழத்தை
நறுக்கும் போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மூடியை திருப்பும்
போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை
இடவேண்டும். எண்ணெய் ஊற்றும்போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க
வேண்டும். இந்த விளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும் போது சாமுண்டாய
விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும்.

விளக்கேற்றிய பிறகு
கோயிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும். ஐம் என்ற சொல்
சரஸ்வதியையும், க்ரீம் என்ற சொல் லட்சுமியையும், க்லீம் என்ற சொல்
காளியையும் குறிக்கும். சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்கு சரஸ்வதி
கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே என
பொருள்.

எலுமிச்சையின் மகிமை

ராகு
காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று
பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு
காரணம் எலுமிச்சை தேவகனி என்பதால் ஆகும். மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும்
சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum