தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இன்னும் பாடலே எடுக்கல… – இது கொலவெறி நியூஸ்

Go down

இன்னும் பாடலே எடுக்கல… – இது கொலவெறி நியூஸ் Empty இன்னும் பாடலே எடுக்கல… – இது கொலவெறி நியூஸ்

Post  ishwarya Tue Apr 09, 2013 4:50 pm

ஊரெங்கும் பேச்சு, ஒரு கோடி டவுன்லோடு என்று ‘வொய் திஸ் கொலவெறிடி’ பாடலுக்கு திரும்பிய இடமெல்லாம் வரவேற்பு. இந்த அதிகப்படியான வரவேற்பை கண்டு ஆடிப் போயிருக்கிறார்கள் தனுஷும், ஐஸ்வர்யாவும். ட்யூன், மற்றும் வரிகளுக்கு இணையான பிரசன்டேஷன் இல்லை யென்றால் அத்தனை பெருமைக்கும் குட்டு விழுமல்லவா? அதனால்தான் அப்படியொரு பதற்றம் அவர்களுக்குள்.

சுமார் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்த பின்பும் இந்த பாடலை படமெடுக்காததன் காரணம் இதுதானாம். படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜுடன் உட்கார்ந்து நாள்தோறும் யோசித்து வருகிறார்களாம் இருவரும். ஆனால் உருப்படியான ஒரு வடிவம்தான் கிடைக்கவில்லை இன்னும்.

இதற்கிடையில் இன்னொரு அக்கப்போர். இந்த பாடலை கம்போஸ் செய்தவரும் தனுஷ்தான் என்று செல்வராகவன் ட்விட்டினார் அல்லவா? அதற்கும் ஒரு பேக்ரவுண்ட் இருப்பதாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம்.

மொழி புரியாத தேசத்திலிருந்தும் கூட இந்த பாடலுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த பாடலின் ட்யூனுக்கான ரைட்ஸ்சை கேட்டும் ஏகப்பட்ட என்கொயரிகள். இவற்றையெல்லாம் விற்றால் சட்டப்படி பெரும் பங்கு பணம் கம்போஸ் செய்தவருக்கும் போகுமாம். அதுவும் தனுஷ்தான் என்று கூறிவிட்டால் பணத்தை பங்கு போட வேண்டாமல்லவா? அதனால்தான் இப்படி செல்வராகவன் சொன்னதாக கூறுகிறார்கள்.

அவரை கேட்டால் அப்படியெல்லாம் இல்லை என்று கூறப்போகிறார்… அவ்வளவுதானே?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum