சிறுநீர் வகை
Page 1 of 1
சிறுநீர் வகை
மனிதர் சிறுநீர்:
மனிதர்களின் ஜடராக்கினி உவர்ப்பு சுவையுடைய சிறுநீரினால் காணாக்கடி விஷமும், சோகையும், வாத தோஷமும் தீரும். அதை முறைப்படி பருகினால் இருமல், சுவாசம், அசிர்க்கரம், மேகமூத்திரம், கிரந்தி விரணம் ஆகியவை போகும். இதை நசியஞ் செய்தால் சுரம், அபஸ்மாரம், சகல விஷ சுரம் ஆகியவை நீங்கும். அந்த நீரால் கழுவினால் விழி, முகம், செவி ஆகிய இடங்களில் பிறக்கின்ற கட்டிகள் விலகும். தவிர காய சித்திக்கு உதவும்.
பசு மூத்திரம்:
பசு மூத்திரத்தை கோசலம் என்றும் கூறுவர். இதனால் விஷபாண்டு, சோகை, பற்பல வீக்கம், சகல விஷம், அசிர்க்கு, காமாலை முதலிய நோய்கள் தீரும்.
எருமை மூத்திரம்:
இதனால் பெரு வயிறு, பாண்டு, காமாலை,பிரமேகம், சோகை, கிருமி முதலிய நோய்கள் அகலும். இதில் சூடு உண்டு.
வெள்ளாட்டு மூத்திரம்:
சோகை, பாண்டு, பற்பல வீக்கத்தின் எரிச்சல், இரத்தப்போக்கு, துர்மாமிசம், மகோதரம் ஆகியவற்றை நீக்கும்.
யானை மூத்திரம்:
இதனால் அதிதூல நோய், சோகை, வாய்வுக்கிருமி, கருங்கரப்பான் இவை நீங்கும். யானையை போன்ற வலிமையும் சரீர புஷ்டியும் உண்டாகும்.
குதிரை மூத்திரம்:
சூடான குதிரை மூத்திரத்தால் பாதப்புற்று, கண்டு கண்டாக தடித்தல், கிருமி நோய், வாத நோய், கப தோஷம் ஆகியவை நீங்கும்.
ஒட்டை மூத்திரம்:
வெப்பத்தை உடையது. சரீரத்தில் ஓடி புடைக்கின்ற தடிப்பு, சந்நிபாதம், சூலைப்பிடிப்பு, உதரவர்த்த வாதம், வயிற்று வலி, மண்டல குஷ்டம் ஆகியவை குறையும்.
கழுதை மூத்திரம்:
உஷ்ணம், தாது நஷ்டம், தோல் நோய்கள், காசம், இரைப்பு, விஷம், கால்கள் உள்ள கிருமி, விரணம், அபஸ்மாரம், தந்திமேகம், கிரந்தி, பால ரோகங்கள் ஆகியவை நீங்கும்.
இவை அனைத்தும் சிறுநீர் வகைகள் மற்றும் அவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை, தீமைகள் ஆகும். இதை அறிந்து கொண்டு சிறுநீரை முறைப்படி சரியான அளவில் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum