“தனுஷ் இயக்கத்தில் நடிக்க நான் ரெடி”: அபிஷேக் பச்சன்
Page 1 of 1

‘கொலவெறிக்கு’ப் பிறகு தனுஷ் ஆல்ரவுண்டர் ஆகிவிட்டார். அபிஷேக்கின்
பாராட்டைத் தொடர்ந்து அவரை வைத்து தனுஷ் இயக்கப் போவதாக கிசுகிசுக்கள் வலை
உலகில் பரவி வந்தது. இந்நிலையில் “தனுஷின் இயக்கத்தில் நான் நடிக்கப்
போவதாக செய்திகள் பரவியுள்ளது. அப்படி நான் எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால்
இப்போது சொல்கிறேன், தனுஷ் சம்மதித்தால் அவரது இயக்கத்தில் நடிக்கத் தயாராக
இருக்கிறேன். தனுஷின் முதல் படத்திலிருந்து சமீபத்திய படங்கள் வரை
அனைத்தையும் பார்த்துவிட்டேன். அபாரமான நடிப்புத் திறமை கொண்டவராக
இருக்கிறார். இளைஞர்களை எப்படி கவர்வது என்ற சூத்திரத்தை தன்னுள்ளே
கொண்டிருக்கிறார்.” என்று கூறினார்.
இந்தியா டுடே நடத்தும் ‘யூத் சம்மிட் 2011′ நிகழ்சிக்காக இளைஞர்களின்
மத்தியில் உரையாட இன்று (டிசம்பர் 10) சென்னை வந்திருக்கும் அபிஷேக் மேலும்
பேசுகையில், ” நான் நடித்த 17 படங்கள் தொடர்ந்து ‘பிளாப்’ ஆகின. ஆனாலும்
இன்று இத்துறையில் கம்பீரமாக வலம் வருகிறேன். பெரிய நடிகன் என்ற நினைப்பு
எனக்குக் கிடையாது. என்னை நானே சுய விமர்சனம் செய்து கொள்வதால் இதைத்
தெரிவிக்கிறேன்.
சிலர் நடிகர்களின் நடிப்பை விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்று ஒட்டு
மொத்தமாக அவர்களை அழிக்கும் வேலையை செய்கின்றனர். இந்நிலையில் என்
வாழ்க்கையில் ஒரு சம்பவத்தை நினைவு கூற விரும்புகிறேன். எனது ஒரு படத்தின்
காட்சியை திரையரங்கிற்கு நேரில் சென்று பார்த்தேன். படம் முடிந்து வெளியில்
வந்த ஒரு பெண் என் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டு ‘உன் தந்தைக்கு
இருக்கும் பெயரை அசிங்கப்படுத்தாதே’ என்று சொல்லிப் போய்விட்டார்.
அன்றுதான் உண்மையாகவே நான் எவ்வளவு கேவலமாக நடிக்கிறேன் என்று
தெரிந்தது. தூக்கம் வராமல் நடு இரவில் என் தந்தையை எழுப்பி “எனக்கு என்மீதே
வெறுப்பாக இருக்கிறது. பேசாமல் வேறு வேலை செய்யட்டுமா?” என்று கேட்டேன்
அதற்கு அவர், “உன்னை நீயே விமர்சித்துக் கொள். அதை செய்யாமல் எந்த
முடிவையும் எடுக்காதே” என்று கூறினார். அந்த பதில் என் தவறுகளை அறியத்
தூண்டியது.
உடனடியாக எனது அனைத்து படங்களையும் பார்த்து கிட்டத்தட்ட இருபதுக்கும்
மேற்பட்ட நோட்டுகளில் என் தவறுகளைக் குறித்துக் கொண்டேன். இளைஞர்களுக்கு
இதைத் தான் நான் சொல்ல விரும்புகிறேன். உங்களை நீங்களே சோதனை செய்து
கொள்ளுங்கள் தவறை அறிந்து கொள்ளாமல் வேறொன்றை நாடாதீர்கள் அதுவும் தவறாகவே
நடக்கும்.”
இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது இந்தியா முழுக்க பேமசாகி வரும்
காலகட்டத்தில் இன்னமும் சிலர் முறுக்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள் இதைப்
பற்றி அபிஷேக் கருத்து தெரிவிக்கும்போது” எனக்கும் இதில் விருப்பம் தான்.
ஆனால் கதை தான் அதை தீர்மானிக்க வேண்டுமே தவிர நடிகர்களின் பிரபலத்தன்மையை
பொருத்து முடிவெடுக்கக் கூடாது. ஆனால் இந்த டிரண்ட் தமிழில் பார்ப்பதற்கு
நன்றாக இருக்கிறது..!”
பேஸ்புக் முழுக்க இரண்டு விஷயங்கள் தான் பிரபலமாக இருக்கிறது. ஒன்று
தனுஷின் ‘கொலவெறி டி’.. மற்றொன்று அபிஷேக்கின் ‘பேபி பி’… மணிரத்தினத்தை
சந்திக்க அடிக்கடி சென்னைக்கு வரும் அபிஷேகிற்கு தமிழ் படங்களில் நடிக்க
ஆசையாம்…! பாலிவுட் டூ கோலிவுட் பாலம் ரெடி…!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கவர்ச்சியாக நடிக்க நான் ரெடி! இனியா அதிரடி!
» தமிழ் டர்ட்டி பிக்சர்ஸில் நடிக்க நான் ரெடி… நிகிதா
» சிம்புவுடன் நடிக்க நான் ரெடி… ஆனா மூணு கண்டிஷன்’- நயன்தாரா
» ‘மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நான் நடிக்கும் முதலும் கடைசியுமான படம் ’3′! – தனுஷ்
» அபிஷேக் இயக்கத்தில் ‘கையெழுத்து’!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum