தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

3டியில் உருவாகும் ‘போர்க்குற்றம்’!

Go down

3டியில் உருவாகும் ‘போர்க்குற்றம்’! Empty 3டியில் உருவாகும் ‘போர்க்குற்றம்’!

Post  ishwarya Tue Apr 09, 2013 1:31 pm

3டியில் உருவாகும் ‘போர்க்குற்றம்’! Porkural-12-350x251இளைஞர்கள்
பலர் ஒன்று சேர்ந்து உருவாக்கும் புதிய படம் ‘போர்க்குற்றம்’.
போர்க்குற்றம் புரிந்த ஒரு ராணுவ வீரரின் மரண வாக்குமூலத்தை மையமாக வைத்து
உருவாகியிருக்கும் இப்படம், உலகத்தில் எந்த நாடுகளிலும் போர்
உண்டாகக்கூடாது என்றும், இரத்தத்தினால் ஏற்படும் மரணம் தவிர்க்கப்பட்டு
அனைத்து நாடுகளும் சமாதானத்துடன் இருக்க வேண்டும் என்ற கருத்தை
வலியுறுத்துகிறது. ‘இந்தித் பிக்சர்ஸ்’ என்ற பட நிறுவனத்தை ஆரம்பித்த
இளைஞர்களின் கூட்டு முயற்சியால் உருவாகும் இப்படத்தை ஏகலைவன் இயக்குகிறார்.




யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாத இவர், இயக்குநர் மணிரத்னத்தை தனது
மானசீக குருவாக எண்ணி, அவருடைய படங்களைப் பார்த்து பார்த்து சினிமா
ஆர்வத்தை வளர்த்து கொண்டாராம். போர்க்களத்தை கதைக்களமாகக் கொண்ட இப்படம்
3டி-யிலும் உருவாகிறது. இதன் மூலம் ஆசியாவிலேயே தயாரான முதல் போர்க்கள
முப்பரிமாண (3D) படம் என்ற பெருமையை இப்படம் பெறுகிறது.

முழுக்க முழுக்க புதுமுகங்கள் இடம்பெறும் இப்படத்தில், பிரவீன்குமார்
ஹீரோவாக அறிமுகமாக, ரித்விகா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் சுரேந்தர்,
சின்மய் ஸ்ரீசந்தன், சேவியர், புருஷோத்தமன், அனிருத், கிஷோர், ரஞ்சித்,
ராம், சதீஷ் என்று பல புதுமுகங்களும் அறிமுகமாகிறார்கள், கார்த்திக் ஹெர்ஷா
பாடல்களுக்கு இசையமைக்க, ஏ.தினேஷ் பின்னணி இசை அமைத்திருக்கிறார்.
அபிநந்தன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆரோ 3டியில் விஸ்வரூபம் 2
» நேபாள யுத்தத்தில் போர்க்குற்றம்" : ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஒருவர் கைது
» ஆன்மீகம் என்றால் ஆனந்தம் என்று சொல்லுவதும் சரிதான். ஆனந்தம் என்று சொல்வதை விட அமைதி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக அல்லது அமைதியினால் உருவாகும் ஆனந்தம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். துன்பம் இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்பட
» உறைநிலைப்படுத்தி உருவாகும் குழந்தைகள்
» பெண்களுக்காக உருவாகும் 'அசைவம்'!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum