தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாகற்காய் சூப்

Go down

பாகற்காய் சூப் Empty பாகற்காய் சூப்

Post  amma Tue Apr 09, 2013 1:03 pm


தேவையான பொருள்கள்:

பாகற்காய் = 2
பால் = அரை டம்ளர்
வெங்காயம் = 1
தக்காளி = 1
பச்சை மிளகாய் = 1
மிளகுத்தூள் = 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி = சிறிதளவு
பெருஞ்சீரகம் = அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு = அரை தேக்கரண்டி
பட்டை = 1
கறிவேப்பிலை = சிறிதளவு
எலுமிச்சை பழம் = பாதி
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
கொத்தமல்லி இலை = சிறிதளவு

செய்முறை:

பாகற்காயை நன்கு கழுவி நறுக்கி கொள்ளவும். அதனுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக நறுக்கி கொள்ளவும். பாலை நன்கு காய்ச்சி வைத்து கொள்ளவும்.
வாணலியில் தேவையான அளவு எண்ணேய் விட்டு பெருஞ்சீரகம், உளுத்தம் பருப்பு, பட்டை போட்டு சிறிது கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
வதங்கியதும் வேக வைத்த பாகற்காயை போட்டு கிளறி சிறிது தண்ணீர் விட்டு சிறிது நேரம் வேக விட்டு பிறகு தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து எலுமிச்சை பழத்தை பிழிந்து இறக்கவும்.
இறக்கியவுடன் காய்ச்சிய பாலை ஊற்றி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

சுவையான ஆரோக்கியமான பாகற்காய் சூப் தயார். இதை ரைஸோடும், தனியாகவும் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். மேலும் இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடியது.

மருத்துவ குணங்கள்:

பாகற்காயில் வைட்டமின் “சி” 88 மி.கி., வைட்டமின் “ஏ” 126 மைக்ரோ கிராம், இரும்புச்சத்து 1.8 மி.கி. பாஸ்பரஸ், கால்ஷியம் ஆகியவை காணப்படுகிறது. குறைவான அளவில் வைட்டமின் “பி” உள்ளது.
உடலுக்கு குளிர்ச்சி தரும். மலச்சிக்கலைப் போக்கும். பசியை தூண்டும். சர்க்கரை நோயைக்கட்டுப்படுத்த உதவும். இந்த பாகற்காய் சூப் போன்ற ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum