தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏகாதசியின் சிறப்பு

Go down

 ஏகாதசியின் சிறப்பு  Empty ஏகாதசியின் சிறப்பு

Post  amma Fri Jan 11, 2013 2:04 pm


ஏகாதசியின் சிறப்புக்கு எத்தனையோ சம்பவங்கள் உதாரணமாக உள்ளன. அதில் நம்பாடுவான் வாழ்க்கை தனித்துவம் கொண்டது. திருநெல்வேலியில் இருந்து சுமார் 47 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம் திருக்குறுங்குடி, பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் என்று நான்கு ஆழ்வார்களால் பாடப்பட்ட தலம் இது.

திருமங்கையாழ்வார் கடைசியில் பாடியதும், முக்தி பெற்றதும் இங்கு தான். இங்கே நின்ற நம்பி, இருந்த நம்பி, கிடந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி, மலைமேல் நம்பி என்று ஐந்து விதமாக காட்சி தருகிறார் பெருமாள். வராக அவதாரம் கொண்டு நிலங்களை மீட்டருளிய பெருமாள் இங்கு தங்கியதாலும், தன்னுடைய பேருருவை குறுக்கிக்கொண்டு திகழ்ந்ததாலும் குறுங்குடி என்று தலத்துக்குப் பெயர் வந்தது.

இந்த திருக்குறுங்குடிக்கு அருகில் உள்ள மகேந்திர கிரியின் சாரலில் வசித்து வந்தவன் நம்பாடுவான் என்ற பக்தன். இது காரணப்பெயர். `நம்மைப் பாடுவான்' என்று பெருமானால் சொல்லப்பட்டதால் நம்பாடுவான் என்றே ஆயிற்று. தாழ்த்தப்பட்ட குலத்திலே பிறந்த போதிலும் அவருடைய பக்தி மிக உயர்வாய் இருந்தது.

அதிகாலை பொழுதில் எழுந்து நீராடி, ஆலயத்தை நாடிச்செல்வார். குலத்தினால் தாழ்ந்தவன் என்று அனுமதிக்கப்படாத போதிலும், தொலைவில் நின்று குறுங்குடி நம்பியை நினைத்து மனங்கசிந்து பாடுவார். ஒரு நாள் இரு நாளல்ல. பத்து ஆண்டுகளாக பாடிக்கொண்டிருக்கிறார் நம்பாடுவான். அன்று கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி.

வழக்கம் போல நம்பாடுவான் புறப்பட்டு ஆலயத்துக்கு சென்று கொண்டிருந்தார். மகேந்திரகிரியில் இருந்து குறுங்குடி செல்லும் வழி அடர்த்தியான காடு. அந்த காட்டின் வழியே வந்தவரை தடுத்து நிறுத்தியது ஒரு பெரிய பூதம். `நல்லவேளை! வந்தாயாப என்னுடைய பத்து நாள் பசி தீர்ந்து போயிற்று' என்று சொல்லி, நெருங்கியது.

பயம்தரக்கூடிய அந்த கோரவடிவைக் கண்டும் கலங்கவில்லை நம்பாடுவான். இன்று நம்மால் பாடித் துதிக்கமுடியாமல் போகிறதே என்றுதான் கலங்கினார். அதை வாய்விட்டு சொன்னார். உன்னுடைய விருப்பப்படியே ஆகட்டும். எதற்கும் பலனில்லாத இந்த உடல், உன் பசியைப் போக்க உதவும் என்றால் அது சிறப்பானதுதான்.

ஆனால் நான் சென்று பெருமானைத் துதித்து விட்டு வருகிறேன் என்றார். அதை கேட்டு பூதம் சிரித்தது. நான் ஏமாறுவேன் என்று நினைக்கிறாயா? என்னிடமிருந்து தப்புவதற்காக சொல்லும் பொய் இது. உன்னை விழுங்கி என் பசியைத் தீர்த்துக்கொள்வேன் என்று ஓடிவந்தது. அப்போதும் கூப்பிய கை விலக்காமல் பேசினார் நம்பாடுவான். உன்னிடம் சொன்னபடி நான் கண்டிப்பாக திரும்பி வருவேன்.

அப்படி வராமல் போனால் நரகத்தில் உழலும்படியான பதினெட்டு வகையான பாவங்கள் என்னை வந்து சேரட்டும் என்றார். இந்த வார்த்தையில் மனம் இளகிய பிரம்மராட்சத் பூதம் அவனை ஆலயம் செல்ல அனுமதித்தது. குறுங்குடிக்கு அருகே நம்பாடுவான் வந்தார். ஆலயத்தின் தொலைவில் நின்றபடியே பாட ஆரம்பித்தார். மனதுக்குள் சந்தோஷமும் பொங்கியது.

சற்றே துன்பமும் ஏற்பட்டது. இன்றைய ஏகாதசியும் வீணாகாமல் பாட முடிந்ததே என்பது நம்பாடுவாருக்குள் ஏற்பட்ட சந்தோஷமாகும். ஆனால் பெருமானை தரிசிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்பட்டது. நம்பாடுவானின் மனத்தில் அந்த வருத்தம் அழுத்தும் முன்பாக விலகியது கொடிமரம். கருவறையில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்தார் அழகிய நம்பி. நம்பாடுவான் மனங்குளிர்ந்தார்.

பெருமானின் திருவருளை நினைந்து கண்ணீர் விட்டார். அப்போது தனக்காக பூதம் பசியோடு காத்துக் கொண்டிருப்பது அவருக்கு நினைவில் இருந்தது. வேகமாக புறப்பட்டர். பெருமானின் தரிசனம் கிடைத்த சந்தோஷம் ஒரு பக்கம், பிரம்மராட்ச பூதம் பசியைத் தீர்க்க வேண்டும் என்கிற எண்ணம் மறுபுறம். வேகமாக நடந்தார்.

அப்போது முதியவர் ஒருவர் வந்தார். அவர் நம்பாடுவாரிடம் இவ்வளவு அவசரமாக எங்கே போகிறாய்ப என்று கேட்டார். அவரது தோற்றமும் இனிய பேச்சும், நம்பாடுவாரை கவர்ந்தன. மிகுந்த அடக்கத்துடன் தான் செல்லும் காரணத்தைச் சொன்னார். அதை கேட்ட முதியவர் சிரித்தார். இதென்ன பைத்தியக்காரத்தனம்ப யாராவது வலியச் சென்று உயிரை விடுவார்களா? உயிருக்கே ஆபத்தான சந்தர்ப்பத்தில் சொல்லப்படும் பொய் பாவமாகாது.

போய் பிழைக்கும் வழியைப் பார் என்றார் அவர். சத்தியத்தைவிட உயிர் பெரிதல்ல. பூதத்தின் பசியைப் போக்குவதைவிட இந்த உடல் பெரிதுமல்ல. எனவே பூதத்தை திருப்திப்படுத்துவதே என் திருப்தி என்றார் நம்பாடுவார். அதைக்கேட்ட முதியவர் சுயஉருவைக் காட்டினார். தவத்தாலும் காணமுடியாத அழகிய நம்பியின் திருவுருவைக் கண்டு தொழுதார் நம்பாடுவான். மனம் நிறைந்தது. சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற அதிவேகமாக நடந்தார்.

அவருக்காகவே காத்திருந்த பிரம்மராட்ச பூதம் நம்பாடுவானைப் பார்த்ததும் வேகமாக ஓடி வந்தது. அவரை பிடித்துத் தூக்கியது. நம்பாடுவானிடம் எந்த சலனமுமில்லை. மிகவும் பசிக்கிறதாப சரி என்னைச்சாப்பிட்டு உன் பசியைத் தீர்த்துக்கொள் என்றார் நம்பாடுவான். பிரம்மராட்ச பூதம் அதிர்ந்தது. தன்னுடைய மரணத்தை இவன் எப்படி சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறான்ப அப்படி இவனை நாம் சாப்பிடுவதால் அதைவிடப் பெரிதாக ஏதோ ஒன்று அவனுக்கு கிடைக்கப்போகிறது என்று தோன்றியது.

அதன் தயக்கத்தைக் கவனித்தார் நம்பாடுவான். என்ன யோசனைப சீக்கிரம் சாப்பிட்டு உன் பசியைத் தனித்துக்கொள். என்னுடைய விரதத்தை முடித்து விட்டேன். உற்சாகமாகச் சொன்னார் நம்பாடுவான். அந்த உற்சாகமும் மலர்ச்சியும் பூதத்துக்கு மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. சரி உன்னை விட்டு விடுகிறேன்.

நீ இதுவரை பாடித்துதித்தாய் அல்லவா. அதன் பலனைக் கொடு உன்னை விடுகிறேன் என்றது பிரம்மராட்ச பூதம். அதை மறுத்து தன்னை சாப்பிடச் சொன்னார் நம்பாடுவான். இதனால் பூதம் மேலும் அதிர்ந்தது. ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறாய்ப மனிதப் பிறவி கிடைத்தற்கரியது என்பது உனக்குத் தெரியாதாப போய் உன் குடும்பத்தோடு சந்தோஷமாக இரு.

ஒரே ஒரு நாள் பலனை மட்டும் கொடு. உன்னை விட்டு விடுகிறேன் என்றது. நம்பாடுவான் அதற்கும் மறுத்தார். இறுதியில் பிரம்மராட்ச பூதம் கெஞ்சியது. தயவு செய்து உன் பலனை எனக்கு கொடு. அதன் மூலம் என்னுடைய பிரம்மராட்ச கோலம் முடிவுக்கு வரும் என்று நம்பாடுவானிடம் மன்றாடியது.

அதனால் மனமிரங்கிய நம்பாடுவான். அன்று தான் பாடிய கைசிகப் பண்ணின் பலனைக் கொடுத்தான். பிரம்மராட்சஸ் தன்னுடைய வடிவம் நீங்கி, மேலுலகை அடைந்தது. இதனால் இந்த ஏகாதசிக்கு `கைசிக ஏகாதசி' என்று பெயர்.

இன்றும் திருக்குறுங்குடியில் இந்த கைசிக ஏகாதசி விசேஷமாக நடைபெறுகிறது. அன்று கைசிக புராண நாடகமும் நடைபெறுகிறது. கைசிக ஏகாதசி விரதமிருக்கும் பக்தனுக்கும் சாப நிவர்த்தி செய்யும் ஆற்றல் உண்டாகிறது என்பது இந்த ஏகாதசியின் தனிச்சிறப்பு.*
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum