கம்பன் குடும்பம் முதல் கடவுள் வரை
Page 1 of 1
கம்பன் குடும்பம் முதல் கடவுள் வரை
விலைரூ.
ஆசிரியர் : சாலமன் பாப்பையா
வெளியீடு: விஸ்வாஸ் கலை பண்பாட்டு அறக்கட்டளை
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
விஸ்வாஸ் கலை பண்பாட்டு அறக்கட்டளை, "அக்ரிணி, 78, டி.பி.கே. ரோடு, ஆண்டாள்புரம், மதுரை 625 003. (பக்கம்:234)
கம்பராமாயணத்தைப் பல கோணங்களில் ஆய்வு செய்வதும், அதைப்படித்து நுகர்வதும் தமிழக மக்களுக்கு மிக்க மகிழ்வு தரும் செயல்களாகும். இந்நூல், கம்பனில் காணப்படும் பலமுத்தான செய்திகளைப் பதினொன்று அறிஞர்களின் கட்டுரைகளின் வாயிலாகத் தருகிறது.
கம்பராமாயணத்தில், குடும்ப அமைப்பு, அரசியல், பொதுமக்கள், சந்தங்கள், தாவரங்களும் விலங்குகளும், மருத்துவம், காப்பிய அமைப்பு, கிளைக் கதைகள், கடவுள் கொள்கை என்ற தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்து படிப்போருக்கு இன்பமளிக்கின்றன.
சமூகம் என்பது நல்லோரையும், பொல்லாரையும், வல்லாரையும் மெலிந்தாரையம் உள்ளடக்கியது என்றும் (பக் 18). கிஷ்கிந்தையின் அரசியல் களத்தை, ஆன்மிகக் களமாகக் கம்பன் மாற்றுகிறான் என்றும் (பக் 30), கம்பர் தம் பாடல்களில் ஒழுகுவண்ணம், முடுகு வண்ணம்,
உருட்டு வண்ணம், ஏந்தல் வண்ணம் போன்ற பல
சந்தங்களைக் கையாண்டுள்ளார் (பக்52), கம்பன்மில்டன் இருவரையும் பத்து நிலைகளில் ஒப்பீடு செய்வதும் (பக் 153170) கம்பராமாயணம் ஒரு மருத்துவக்காப்பியம்
என்று ஆய்வதும் (பக்171184) கடவுளை உள்ளத்தால் உணர்ந்து மகிழ்வதே கம்பனின் கடவுள் கொள்கை என்று ஆய்வின் முடிவாகக் கூறுவதும் (பக் 211233) நாம் பலமுறை படித்து இன்புற வேண்டிய செய்திகள் ஆகும்.
கட்டரையாளர்களின் பணி பாராட்டப்பட வேண்டியது ஆகும்.
இந்த அருமையான நூலைப் பிரசாதமாகத் தரும் (இலவசமாக) விஸ்வாஸ் கலை பண்பாட்டு அறக்கட்டளையாரின் பணியைப் பாராட்டலாம்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» கணவரின் முதல் மனைவிக்குப் பிறந்த மகனுடன் குடும்பம் நடத்திய இரண்டாவது மனைவி!
» முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் ரஜினி ரசிகை நான்! – த்ரிஷா பெருமிதம்
» நம் குடும்பம்
» உங்களுக்குப் பிறகு உங்கள் குடும்பம்?
» குடும்பம் ஒரு மரம்
» முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் ரஜினி ரசிகை நான்! – த்ரிஷா பெருமிதம்
» நம் குடும்பம்
» உங்களுக்குப் பிறகு உங்கள் குடும்பம்?
» குடும்பம் ஒரு மரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum