ஒரு பொன்வண்டு சேகரித்த பூந்தேன் துளிகள்
Page 1 of 1
ஒரு பொன்வண்டு சேகரித்த பூந்தேன் துளிகள்
விலைரூ.50
ஆசிரியர் : ஆரூர் தாஸ்
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: பொது
ISBN எண்: 978-81-8476-117-7
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
இன்றைய கால ஓட்டத்தில், விஞ்ஞான உலகில் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இருந்தாலும், வரலாற்றில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடங்கிய இடத்தைத் திரும்பிப் பார்க்கும்போதுதான், நாம் எத்தனை உயரத்தை அடைந்திருக்கிறோம் _ எவ்வளவு தூரத்தைக் கடந்திருக்கிறோம் என்பதன் அர்த்தமும் மதிப்பும் புரிகிறது.
அப்படி, ஆண்டுகள் பலநூறு கடந்தாலும், உலகமே தன்னைத் திரும்பி பார்க்க வைத்து வரலாற்றில் இடம்பெற்ற தலைவர்களையும், அழியாப் புகழ்பெற்ற புலவர்களையும், திரைத்துறையில் தனக்கென ஒரு ஃபார்முலாவை உருவாக்கிய கவிஞர்களையும் பற்றி எத்தனை முறை படித்தாலும் அவை அத்தனையும் நமக்குச் சிந்தனை விருந்துதான்.
இப்படி, சுவையூட்டும், சிந்தனைக் களிப்பூட்டும் செய்திகளை, ஒரு பொன்வண்டு போலப் பறந்து பறந்து சேகரித்து நமக்கு அளித்திருக்கிறார் ‘கலை வித்தகர்’ ஆரூர்தாஸ். இந்த நூல் மூலமாக அந்தத் தேனை நாம் பருகும்போது அந்தச் சுவையை _ அந்த வாசனையை _ அந்தக் காலத்தை உணர முடியும்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடந்த இந்தியா_பாகிஸ்தான் மதக் கலவரம், மதக்கலவரத்தை ஒடுக்கிய மவுன்ட் பேட்டன் இந்திய சுதந்திரத்துக்குப் பாதுகாப்பாக நின்றது, காந்தி சுடப்பட்டது, ஜின்னா மறைந்தது... போன்ற நிகழ்வுகளை நூலாசிரியர் விவரிக்கும்போது, நம்மை நெகிழ வைக்கிறார். ‘உலகம் உருண்டை’ என்பதைக் கண்டறிந்த கலிலியோ பற்றியும், கர்ப்பத்தில் முதலில் தோன்றுவது உடலா, உயிரா என்பது பற்றியும் இந்த நூலில் தகவல்கள் இருக்கின்றன.
இந்த நூல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை படித்து ரசிக்கப் பயனுள்ளதாக இருக்கும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» நவராத்திரி துளிகள்!
» முப்பால் மூன்று துளிகள்
» தேன் துளிகள்
» குறளமிழ்தத்தில் சில துளிகள்
» சிந்தனை துளிகள்
» முப்பால் மூன்று துளிகள்
» தேன் துளிகள்
» குறளமிழ்தத்தில் சில துளிகள்
» சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum