மாம்பழ பர்பி
Page 1 of 1
மாம்பழ பர்பி
தேவையான பொருட்கள்:
மாம்பழச்சாறு – 1 கப்
பால் பவுடர் – 1/2 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பூ – 1 கப்
சர்க்கரை – 2 கப்
ஏலக்காய் – 1 ஸ்பூன்
செய்முறை:
பாத்திரத்தில் நெய் தடவி அதில் மாம்பழச்சாற்றை விட்டு கிளற வேண்டும். மாம்பழச்சாறு கெட்டியானதும் இறக்கி பால் பவுடர், தேங்காய் பூ, சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கிளறி மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடாக்க வேண்டும். பின்பு மீதம் இருக்கும் நெயை விடவேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் பொங்கி வரும் போது ஏலக்காய் பொடியை போட்டு கிளறி பின்னர் நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி லேசாக ஆறியதும் துண்டுகளாக வெட்டவேண்டும். இப்பொழுது சுவையான மாம்பழ பர்பி தயார்.
மருத்துவக் குணங்கள்:
மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து காணப்படுகிறது. இதனை சாப்பிடுவதால் ரத்தம் அதிகரித்து உடலுக்கு பலத்தை தருகிறது.
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சி யும் உள்ளது.
மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக காணப்படுகிறது.
கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக காணப்படுகிறது.
மாங்கொட்டையில் கால்சியம் சத்தும், கொழுப்பு சத்தும் காணப்படுகிறது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum