ஓட்ஸ் தோசை
Page 1 of 1
ஓட்ஸ் தோசை
தேவையான பொருள்கள்:
ஓட்ஸ் = 3 கப்
தயிர் = 2 ஸ்பூன்
சீரகம் = 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் = 3
அரிசி மாவு = 2 ஸ்பூன்
சோள மாவு = 2 ஸ்பூன
வெங்காயம் = 1
உப்பு = தேவையான அளவு
கறிவேப்பிலை = சிறிதளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஓட்ஸை போட்டு சிறிது வெந்நீர் ஊற்றி தயிரை கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு பச்சை மிளகாய் மற்றும் சீரகம் இரண்டையும் அரைத்து இதில் அரிசி மாவு மற்றும் சோள மாவை கலந்து வைத்து கொள்ளவும்.
பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம், சிறிது கறிவேப்பிலை சேர்த்து கலக்கி மெல்லியதாக தோசை போல ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
சுவையான, ஆரோக்கியமான ஓட்ஸ் தோசை தயார். இதை அனைத்து விதமான சட்னியுடனோ, வெறும் தோசையாகவோ சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
ஓட்ஸில் இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் உள்ளது. குறைந்த அளவே கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது.
இதனால் இதயம், நகம் மற்றும் எலும்புகலுக்கு நகங்களுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
உடலில் தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது. மலச்சிக்கலை குறைக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிலைப்படுத்துகிறது. நரம்பு கோளாறுகள் குறைக்கிறது. ஓட்ஸ் சாப்பிடுவதால் கருப்பை கோளாறுகள் குறையும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஓட்ஸ் தோசை
» ஓட்ஸ் தோசை
» ஓட்ஸ் தோசை
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» ஓட்ஸ் உப்புமா ஓட்ஸ் உப்புமா
» ஓட்ஸ் தோசை
» ஓட்ஸ் தோசை
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» ஓட்ஸ் உப்புமா ஓட்ஸ் உப்புமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum