தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மேக்கப் போடுவதில் ஆர்வம் இல்லை: திரிஷா

Go down

மேக்கப் போடுவதில் ஆர்வம் இல்லை: திரிஷா Empty மேக்கப் போடுவதில் ஆர்வம் இல்லை: திரிஷா

Post  ishwarya Mon Apr 08, 2013 12:59 pm

திரிஷாவுக்கு படங்கள் குறைந்துள்ளன். மூத்த நடிகை என படஉலகினர் ஒதுக்குவதாக ‘கிசு கிசு’ கிளம்பியுள்ளது. கதாநாயகர்களும், அவருடன் ஜோடி சேர விரும்பவில்லையாம். ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக தெலுங்கில் நடிக்கும் ‘தம்மு’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது.

ஆனாலும் புதுப்படம் எதிலும் ஒப்பந்தமாகவில்லை. சமீபத்தில் தெலுங்கில் அவர் நடித்து ரிலீசான ‘பாடிகாட்’ படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இருந்தும் படங்கள் வரவில்லை. இது குறித்து திரிஷாவின் தாய் உமாகிருஷ்ணன் கூறும்போது பாடிகாட் படத்தில் திரிஷாவின் நடிப்புக்கு பரவலாக பாராட்டுகள் குவிந்தன. அடுத்து நல்ல கேரக்டருக்கான கதையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்றார்.

அதே நேரம் திரிஷாவின் போட்டி நடிகைகளான அனுஷ்கா, காஜல் அகர்வாலுக்கு நிறைய படங்கள் குவிகின்றன. திரிஷா தற் போது தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு உள்ளார். அதிக மேக்கப் இன்றி வருகிறார். இது குறித்து திரிஷா கூறும் போது, அழகை மிகைப்படுத்தி காட்ட மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. இயற்கையான தோற்றமே பெண்களுக்கு அழகு தரும். அப்படி இருக்கவே நான் விரும்புகிறேன். கண்களில் மட்டும் மேக்கப் போடுகிறேன்.

ஆடைகளிலும் எனக்கு பொருத்தமானவற்றையே தேர்வு செய்து அணிகிறேன் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum