அனுமனின் சிறப்புகள்!
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
அனுமனின் சிறப்புகள்!
அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொரு வரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து சேவை செய்தார்.
ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு.
இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான். எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும், கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு. ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
எல்லோரையும் கலங்கச் செய்யும் சனிபகவானையே ஒரு முறை இவர் கலங்கச் செய்தார். இதனால் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. பகைவரை அச்சமுறச் செய்யும் வலிமையும், மேருமலையைக் குன்றச் செய்யும் உறுதியான மனோதிடமும் உடையவர் ஆஞ்சநேயர்.
இணையற்ற ராமபக்தரான அனுமன் பிரம்மச்சரியத்தை முழுமையாகப் பின்பற்றுபவர். ஆற்றல், சீலம், அறிவு, பக்தி, வெற்றி, வீரம், புலனடக்கம் என்று நிகரற்ற தன்மைகளைக் கொண்டவர். அனுமனிடம் விஷ்ணுவின் குணநலன்களும் உண்டு. அதே சமயத்தில் ருத்ராம்சமாகவும் இவர் கருதப்படுகிறார்.
அனுமன், பரமாத்மாவைப் போன்று என்றும் நிலையானவர் என்றும் நம்முடன் சிரஞ்சீவியாய் இருந்து, நமக்கெல்லாம் ராமநாமத்தின் மீது ருசியை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார். இவரை வணங்கிய மாத்திரத்தில் தைரியமும் ஞானமும் நமக்கு வளரும், காமம் நசிந்து விடும். அனுமன் தனது பக்தர்களுக்கு புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், போன்றவற்றைத் தருபவர் ஆவார்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» அனுமனின் சிறப்புகள்!
» சிவராத்திரியின் சிறப்புகள்
» சித்திரை சிறப்புகள்
» ஆடி மாதத்தின் சிறப்புகள்
» திருவண்ணாமலை சிறப்புகள்
» சிவராத்திரியின் சிறப்புகள்
» சித்திரை சிறப்புகள்
» ஆடி மாதத்தின் சிறப்புகள்
» திருவண்ணாமலை சிறப்புகள்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum