திருக்குறள் காமத்துப்பால் - உரை விளக்கம்
Page 1 of 1

விலைரூ.60
ஆசிரியர் : கி.சு.வி.இலட்சுமி அம்மணி
வெளியீடு: சேகர் பதிப்பகம்
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: ௧௨௮)
* மருங்காபுரி ஜமீன்தாரிணி கி.சு.வி.இலட்சுமி அம்மணி, 1929ல், 500 பக்க அளவில் `திருக்குறள் தீபாலங்காரம்' எனும் உரைநடை நூலை எழுதினார். திருக்குறளுக்கு முதன் முதலாக உரை விளக்கம் எழுதிய பெண்மணி இவராகத்தான் இருக்கும். இவ்வம்மையார் எழுதிய முழுமையான பகுதியிலிருந்து `காதிருக்குறள் காமத்துப்பால் உரை விளக்கம்' பகுதியை மட்டும் எடுத்துத் தனி நூலக்கியுள்ளார் பதிப்பாசிரியர்.
ஒரு பெண்மணி அதிலும் ஜமீன்தாரிணி, சுமார் 77 ஆண்டுகளுக்கு முன் இத்தகையதொரு சிறப்பான உரைவிளக்கத்தை எழுதியிருப்பது அதிசயம் ஆனால் உண்மை. உ.வே.சா., திரு.வி.க., பா.வே.மாணிக்கம் நாயக்கர், கா.சு.பிள்ளை, மு.சு.பூர்ணலிங்கம் போன்று 29 அறிஞர்கள் ஆங்கிலம், கவிதை, உரைநடை போன்ற பல வகைகளில் அம்மணியைப் பாராட்டியுள்ளனர் மூலநூலில். அறவழியினாலாய பொருளைப் பற்றுக் கோடுடையதான இம்மை இன்பத்தைச் சொல்லலே `களவியல்' எனப்படும் (பக்.21) முன்னே, ஊழின்படி கலந்த தலைவனும் தலைவியும் முறைப்படி மணம் புரிந்து, இல்லறமாகிய நல்லறத்தை இனிது நடத்தி இன்பம் துய்த்தலே கற்பாம் (பக். 51) என விளக்கும் இந்நூல் திருக்குறளுக்குப் பெண்கள் உரை விளக்கம் எழுதவில்லையே என்ற குறைபாட்டை நீக்கியுள்ளது. இலக்கிய வளமும், நடையோட்டமும் இன்பம் பயப்பதாய் உள்ளது, அரிய முயற்சி, அரிய பதிப்பு.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» திருக்குறள் காமத்துப்பால் - உரை
» திருக்குறள் சிந்தனை-காமத்துப்பால்
» திருக்குறள் சிந்தனை-காமத்துப்பால்
» திருக்குறள் காமத்துப்பால் உயராய்வுகள்
» திருக்குறள் காமத்துப்பால் ஆய்வுகள்
» திருக்குறள் சிந்தனை-காமத்துப்பால்
» திருக்குறள் சிந்தனை-காமத்துப்பால்
» திருக்குறள் காமத்துப்பால் உயராய்வுகள்
» திருக்குறள் காமத்துப்பால் ஆய்வுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum