தங்கம்மாள் பாரதி படைப்புகள்
Page 1 of 1
தங்கம்மாள் பாரதி படைப்புகள்
விலைரூ.200
ஆசிரியர் : முனைவர் எஸ்.விஜயபாரதி
வெளியீடு: அமுதசுரபி
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
அமுதசுரபி, ஏ-7, இரண்டாம் அவென்யூ, அண்ணா நகர் கிழக்கு, சென்னை-600 102. (பக்கம்: 472.)
இருபதாம் நூற்றாண்டின் இணையிலாக் கவிஞன் சுப்பிரமணிய பாரதியார்; தமிழ் இலக்கியத்தின் ஒரு திருப்பு முனையாக அவரது கவிதைகளும், கட்டுரைகளும் அமைந்தன எனலாம். மகாகவி பாரதியாரின் தாக்கம் வெளி உலகினரை மட்டுமல்லாது, வீட்டிற்குள்ளும் வெளிப்பட்டது. அவர் மனைவி செல்லம்மா பாரதியும் படைப்பாளியாகத் திகழ்ந்தவர். பாரதியாரின் மகள் தங்கம்மாள் பாரதியும் படைப்பாளியாக இருந்துள்ளார் என்பதை இந்நூல் வாயிலாக அனைவரும் அறியலாம்.
கடந்த 1905ல் பிறந்த தங்கம்மாளுக்கு இவ்வாண்டு நூற்றாண்டாகும்; நூற்றாண்டு மலராக இக்கட்டுரைத் தொகுதியை ஷ்ரீராம் நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர்.
தங்கம்மாள் பாரதியின் எழுத்துக்களை ஒன்று சேர்த்து, அவர் மகள் திருமதி விஜயபாரதி தொகுத்துள்ள இந்நூல், தங்கம்மாள் பாரதியின் சிந்தனைகளை மட்டுமல்லாது, பாரதியாரைப் பற்றியும், அவர் படைப்புகள் பல உருவான விதம் பற்றியும் நாம் அறிந்து கொள்ள உதவுகிறது.
புதுச்சேரியில், நள வருடம் கார்த்திகை மாதம் 8ம் தேதி புதன் கிழமை இரவு அடித்த புயல் காற்றும் அன்று பாரதி `திக்குகள் எட்டும் சிதறி' என்று தொடங்கும் பாடலைப் பாடியதும், பாரதியும், தங்கம்மாளும் வ.வே.சு.அய்யர், பாரதிதாசன், அரவிந்தர் ஆகியோர் இல்லம் சென்று புயல் காற்றின் பாதிப்பு குறித்து கேட்டு வந்த நிகழ்ச்சிகளைப் படிக்கும்போது, பாரதியாரின் மனித நேயப் பண்பிற்கு நாம் தலை வணங்குகிறோம் (பக்;69-74).
பாரதியார் குறித்து, `கோபமும் குணமும்' என்ற கட்டுரையில் தங்கம்மாள் எழுதியுள்ளதைப் படிக்கும்போது பாரதியாரின் துறவு மனப்பான்மையை அறிந்து வியக்கிறோம் (பக்.215-218). செல்லம்மாள் இறுதி நாட்களில், ராஜாஜி ஆறுதலாக எழுதிய கடித வரிகளைப் படிக்கும்போது, நம் கண்கள் கலங்குகின்றன (பக்.236).
நூலின் பல கட்டுரைகள், பாரதியைப் புதிய கோணத்தில் பார்க்க வைக்கின்றன. பாரதி அன்பர்கள் மட்டுமல்லாது, அனைவரும் படிக்க வேண்டிய அருமையான நூலாகும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» முத்துரத்தினம் படைப்புகள்
» புதுமைப்பித்தன் படைப்புகள்
» இசைஞானி படைப்புகள்
» மண்ட்டோ படைப்புகள்
» புதுமைப்பித்தன் படைப்புகள்
» புதுமைப்பித்தன் படைப்புகள்
» இசைஞானி படைப்புகள்
» மண்ட்டோ படைப்புகள்
» புதுமைப்பித்தன் படைப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum