தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குரு-25

Go down

குரு-25                                Empty குரு-25

Post  birundha Fri Apr 05, 2013 10:25 pm

1. குரு - மூவுலகங்களின் புத்தி சக்தியாக விளங்குகிறர்.

2. நாட்டை ஆள வைப்பார், நல்லோருடன் சேர வைப்பார்.

3. தெய்வீக அறிவுக்கும், வேதாந்த ஞானத்திற்கும், முக்கரணங்களின் தூய்மைக்கும் மூலப்பொருளாக குரு திகழ்கிறார்.

4. ஒளி படைத்த மேதைகளையும், பிரும்மத்தை உணர்ந்த ஞானிகளையும், பக்தர்களையும் ஒருங்கிணைக்கும் மூலகர்த்தா இவரே ஆவார்.

5. பலம் படைத்த இவரது தசை இளமையில் வந்தால் கல்வியில் முதல் நிலை உண்டாகும், நடு வயதில் வந்தால் சகல பாக்கியங்களும் ஏற்படும். வாழ்க்கையில் இறுதிப்பகுதியில் வந்தால் சந்ததிகள் செழிப்பார்கள்.

6. குருவை வியாழன் என்று அழைப்பார்கள். புத்திரகாரகன் என்றும் அவருக்கு ஒரு பதவி உண்டு.

7. குருவின் நிலையை கொண்டு தான் ஒருவருக்கு பிள்ளைகள் உண்டா, அவர்கள் ஜாதகருக்கு உதவுவார்களா? அடங்கி நடப்பார்களா என்பதை அறியலாம்.

8. தலைவணங்காத தலைமைப் பதவியை தந்திடுவார். மாபெரும் சாதனைகளை செய்ய வைத்து மனித குலமானிக்கமாக திகழ வைப்பார்.

9. புதுப்புது உத்திகளை காண வைப்பார். மென்மைக்கும், தன்மைக்கும் வித்தாவார் இவர்.

10. விவேகத்தை அளிப்பார். வித்தைகளில் வல்லவர் ஆக்குவார். அந்தஸ்தையும், ஆற்றலையும் வாரி வழங்குவார். சிம்மக்குரலை தந்து பலரையும் பணிய வைக்கும் ஆற்றலை தருவார்.

11. மஞ்சள் நிறத்தவர். மந்தகாஷா முகத்தவர். இனிப்புப் பிரியர். சாத்வீகக் குணத்தவர்.

12. உடலில் சதை இவர். வாதம், பித்தம், கபம் இவற்றில் கபத்திற்கு உரியவர் இவர்.

13. பொன்னன் எனும் பெயர் படைத்த இவரது உலோகமே பொன் தான்.

14. புஷ்பராகக் கல்லுக்குரியவர். கஜானாவை (வங்கியை) விளங்க வைப்பவர்.

15. ஆண் கிரகம் இவர். பஞ்ச பூதங்களில் ஆகாயம் இவர். வடகிழக்கு இவரது திசை.

16. மிக மிக மேலான சுபக்கிரகம் இவர். தனுசு, மீனம் ஆகிய ராசிக்களுக்குரியவர்.

17. குருவுக்கு கடகம் உச்ச வீடு, மகரம் நீச வீடு.

18. பகலில் பலமிகுந்த இவர் தனது பார்வையால் இதர கிரகங்களுக்கும் பலத்தை தருபவர்.

19. குருவுக்கு சந்திரன், அங்காரகன், சூரியன் மூவரும் நண்பர்கள். புதனும்- சுக்கிரனும் பகைவர்கள்.

20. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி என்ற மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன் இவர்.

21. ஜாதகத்தில் ஏனைய கிரகங்களில் நிலை சற்று சரி இல்லாத நிலையில் இருந்தாலும் கூட இவர் ஒருவர் மட்டுமே உயர்ந்திருந்தால் போதுமானது நாம் உயர்வதற்கு.

22. முல்லை மலர்கள், கொண்டக்கடலை சர்க்கரைப்பொங்கல், குருவுக்கு மிகவும் பிடித்தமானவை.

23. செல்வம், புகழ், குழந்தை பாக்கியம், திருமணம் இந்த நான்கும் குருவினால் கிடைக்கும்.

24. குரு தோஷங்கள் நீங்க சகஸ்ரநாம அர்ச்சனைகள், குரு ஹோமம் செய்யலாம்.

25. வழக்கறிஞர், மத போதகர், ஆசிரியர், லேவாதேவித் தொழில் ஆகியோரது குணங்களை தீர்மானிக்க குருவின் நிலை தான் முக்கியமானது
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum