ஹயக்ரீவரை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
ஹயக்ரீவரை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்
கலைமகளாம் ஸ்ரீசரஸ்வதிதேவியின் குரு, வேதம் மீட்டுத் தந்த பகவான் என்றெல்லாம் போற்றப்படுபவர் ஸ்ரீஹயக்ரீவர். தமிழகத்தில் உள்ள ஆலயங்களில், இவருக்கு தனிச்சந்நிதிகள் குறைவு. கும்பகோணம் மேலக்காவிரியில், தனிக்கோவிலில் அமர்ந்து அருள்பாளிக்கிறார் ஸ்ரீஹயக்ரீவர். மடியில் ஸ்ரீலட்சுமியைத் தாங்கியிருப்பதால், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் எனும் பெயருடன் அருள்புரிந்து வருகிறார் இவர்.
காவிரிக் கரையில், வடக்குப் பார்த்தப்படி காட்சி தரும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால், கல்வி ஞானம் கிடைக்கும் என்பதால், தஞ்சாவூர் மாவட்ட மாணவர்களின் வருகையை தினமும் காணலாம். இங்கே வியாழக்கிழமைகளில் வந்து, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு உகந்த ஏலக்காய் மாலை சாத்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால், மந்த நிலையில் உள்ள மாணவர்கள் கூட, அதிக மார்க் எடுத்து அசத்துவார்கள் என்பது நம்பிக்கை.
மாதந்தோறும் திருவோணம் நட்சத்திர நாளில், இங்கு ஸ்ரீஹயக்ரீவர் மூலமந்திர ஹோமம் சிறப்புற நடை பெறுகிறது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை மனதாரப் பிரார்த்தித்து, பிறகு தினமும் அவரது மூலமந்திரத்தை ஜபித்து விட்டுப் படிக்கத் துவங்கினால், அதிக மார்க்குகள் எடுக்கலாம் மாணவர்கள்.
எனவே இந்தக் கோவிலில் நடைபெறும் ஸ்ரீஹயக்ரீவர் மூலமந்திர ஹோமத்தில் கலந்து கொள்ள, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் திரளாக வந்து, பிரார்த்திக்கின்றனர். தேர்வுக் காலங்களில் ஸ்ரீஹயக்ரீவரைத் தரிசித்து, அவருடைய திருப்பாதத்தில் பேனா- பென்சில்கள் வைத்து வழிபட்டு, தேர்வில் அதிக அதிப்பெண்கள் பெற வேண்டும் என மனமுருகப் பிரார்த்தித்துச் செல்கின்றனர்.
அசுவினி, மகம் மற்றும் மூல நட்சத்திர தினங்களில் ஸ்ரீஹயக்ரீவருக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபட, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். இங்கு ஸ்ரீசரஸ்வதிதேவியும் பஞ்சலோக விக்கிரகமாக இருந்து அருள் பாலிக்கிறாள். மாதந்தோறும் சுக்லபட்ச நவமி தினத்தில் (அமாவாசையிலிருந்து 9-ஆம் நாள்) நடைபெறும் ஸ்ரீசரஸ்வதிதேவி மூலமந்திர ஹோமத்தில் கலந்து கொண்டு பிரார்த்தித்தால், படிக்கும் பாடங்கள் மனதில் நன்றாகப் பதியும் என்கின்றனர். அனுமனையும் இங்கு தரிக்கலாம்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பஞ்சபூதத்தை வழிபட்ட பலன்கள் கிடைக்கும் அன்னாபிஷேகம்!
» பங்குனி விரதம் : கிடைக்கும் பலன்கள்
» ஹோமங்களில் போடும் பொருட்களால் கிடைக்கும் பலன்கள்

» கந்தன் காலடியை வணங்கினால்
» பங்குனி விரதம் : கிடைக்கும் பலன்கள்
» ஹோமங்களில் போடும் பொருட்களால் கிடைக்கும் பலன்கள்
» பஞ்சபூதத்தை வழிபட்ட பலன்கள் கிடைக்கும் அன்னாபிஷேகம்!
» கந்தன் காலடியை வணங்கினால்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum