தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூரியத் திருவிழா

Go down

சூரியத் திருவிழா Empty சூரியத் திருவிழா

Post  birundha Fri Apr 05, 2013 8:58 pm

சூரியனின் ஒளிக்கதிர்கள் இல்லாமல் உலகம் இல்லை. பயிர் பச்சைகள் விளைய அவனே காரணமாகிறான். அவனது வெம்மையால், பூலோகத்தில் இருக்கும் தண்ணீர் ஆவியாகி மீண்டும் மழையாகக் கொட்டுகிறது. அதனால் தான், தங்கு தடையின்றி விவசாயம் நடக்கிறது.

நமது பசி தீர்க்கும் இறைவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனே பொங்கல். சூரியபகவான், உணவளிக்கும் வள்ளல் மட்டுமல்ல, கடுமையான நோய்களை போக்கும் மருத்துவராகவும், திகழ்கிறார்.

யார் ஒருவர் தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்கிறாரோ, அவருக்கு நோய் என்பதே இல்லை. சூரியனிடம் வரம் வாங்கிய சாம்பன் கிருஷ்ணருக்கு பல தேவியர் இருந்தாலும் ருக்மணி, பாமா, சாம்பவதி ஆகியோரே முக்கிய தேவியர் ஆவார்.

இவர்களில் சாம்பவதிக்கு பிறந்த மகன் சாம்பன். ஒருமுறை சூரியனின் மகிமையை உலகுக்கு உணர்த்தும் வகையில், தன் குடும்பத்திலேயே ஒரு குழப்பத்தை உண்டாக்கினார் கிருஷ்ணர். தன் மனைவியுடன் அவர் நீராடிக்கொண்டிருந்தபோது அவர்கள் அறியாமல் சாம்பனும் நீராடினான்.

தங்கள் மகன் வெள்ளத்தில் சிக்கிக்கொள்ளக்கூடாதே என்பதால் தாயார்கள் அவனையே கவனித்துக் கொண்டிருந்தனர். கிருஷ்ணை சரிவர கண்டுகொள்வில்லை.

இதை அறிந்த கிருஷ்ணர், சாம்பனிடம் பெற்றோருக்கு தெரியாமல் எப்படி நீராட வரலாம்? எனக் கேட்க, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் வந்துவிட்டது.

எதிர்த்தா பேசுகிறாய்' என்ற கிருஷ்ணன், அவனுக்கு தோல்நோய் ஏற்படும்படி சபித்து விட்டார். இந்த நோய் நீங்குவதற்கு நாரதரிடம் சென்று சாம்பன் ஆலோசனை கேட்டான். அதற்கு நாரதர் சூரிய பகவானின் தரிசனம் கிடைத்தால், நோய் குணமாகும் என்றார்.உடனே சாம்பன் காட்டிற்குச் சென்று சூரிய பகவனைக் குறித்து கடும் தவத்தில் ஆழ்ந்தான். சூரியனும், அவனது தவத்தை மெச்சி அவன் முன் தோன்றினார்.

ஆனந்தமும் பரவசமும் அடைந்த சாம்பனிடம், என்ன வரம் வேண்டும், கேள்...' என்றார் சூரியன். தங்களுடைய தரிசனம் கிடைத்த பிறகு வரம் எதற்குப என்றான் சாம்பன்.

அவனது ஆசை இல்லாத மனம் கண்ட சூரியன் மகிழ்ந்து கண்டிப்பாக வரம் தந்தே தீருவேன்....' என்றார். இதையடுத்து தனக்கு ஏற்பட்டுள்ள தோல் நோய் நீங்க வேண்டும் என்று சாம்பன் வரம் கேட்டான்.சூரியனும் அவ்வாறே வரம் கொடுத்தார்.

இதையடுத்து சூரியனுக்கு சில கோவில்களைக் கட்டினான் சாம்பன். சூரியனுக்கு நம் நாட்டில் பல கோவில்கள் இருந்தன. காஷ்மீரில் மார்த்தாண்ட், ராஜஸ்தானில் சிரோஹ, மேற்கு வங்காளத்தில் ஆடியால் போன்ற இடங்களில் கோவில்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

ஆனால் இப்போது ஒரிசாவில் கொனார்க், தமிழகத்தில் சூரியனார் கோவிலில் மட்டுமே உள்ளன. இதில் சூரியனார்கோவிலில், தன் தேவியரான உஷா, பிரத்யுஷாவுடன் இருக்கிறார் சூரியன். இந்தக் கோவிலில் பிற கிரகங்கள் சூரியனைச் சுற்றி உள்ளன. இந்தியாவில், இத்தகைய அமைப்பில் வேறு எந்தக் கோவிலும் இல்லை.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங
» உள்ளூர் திருவிழா
» புத்தகத் திருவிழா
» குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா
» நீலமலைத் திருவிழா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum