இரண்டாம் உலக போரில் வீசிய வெடிகுண்டு ஜெர்மனியில் கண்டெடுப்பு
Page 1 of 1
இரண்டாம் உலக போரில் வீசிய வெடிகுண்டு ஜெர்மனியில் கண்டெடுப்பு
இரண்டாம் உலக போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் கண்டு பிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டது.
கடந்த 1945ம் வருடம் 2வது உலக போர் முடிவுக்கு வந்தது. எனினும், இந்த போரில் விமானம் வழியாக குண்டுகள் வீசப்பட்டன. இதில், பல வெடிகுண்டுகள் வெடிக்காத நிலையிலேயே இருந்துள்ளன. அவற்றில் சில தற்போது போரில் ஈடுபட்ட நாடுகளில் இருந்து கண்டறியப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜெர்மனியின் மத்திய பெர்லின் நகரில் கடந்த செவ்வாய் கிழமை அன்று மத்திய ரெயில்வே நிலையத்தில் தண்டவாளம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டறியப்பட்டது. இது 100 கி.கிராம் எடை கொண்டது. சோவியத் நாட்டை சேர்ந்தது என்றும் விமானம் வழியாக வெடிகுண்டு பாய்ச்சப்பட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து அருகில் இருந்த கட்டிடங்களின் குடியிருப்போர் அனைவரையும் பாதுககப்பான இடத்திற்கு இடம் பெயர செய்த பின் நேற்று வெடிகுண்டு செயலிழக்க செய்யப்பட்டது. இந்த பணி அரை மணி நேரம் நீடித்தது.
இந்த பணியின்போது அருகிலுள்ள வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும், ரெயில் போக்குவரத்து மற்றும் பெர்லின் நகருக்கான டெகல் விமான நிலைய போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஜெர்மனியில் இன்னும் ஆயிரக்கணக்கான வெடிகுண்டுகள் வெடிக்காத நிலையில் இருப்பதாக நம்பப்படுகிறது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» இரண்டாம் உலகப்போரில் வீசிய 100 கிலோ வெடிகுண்டு ஜெர்மனியில் கண்டுபிடிப்பு
» சென்னை அருகே புராதன சிலைகள் கண்டெடுப்பு
» ஜெர்மனியில் ஆதி பகவான்
» புதிய ஜெர்மனியில்
» அரசியல் வாரிசுக்கு காதல் வலை வீசிய தமன நடிகை!!
» சென்னை அருகே புராதன சிலைகள் கண்டெடுப்பு
» ஜெர்மனியில் ஆதி பகவான்
» புதிய ஜெர்மனியில்
» அரசியல் வாரிசுக்கு காதல் வலை வீசிய தமன நடிகை!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum