தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

2 ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர் பழம்பெரும் நடிகை சுகுமாரி மரணம் இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது

Go down

 2 ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர் பழம்பெரும் நடிகை சுகுமாரி மரணம் இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது  Empty 2 ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர் பழம்பெரும் நடிகை சுகுமாரி மரணம் இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது

Post  amma Fri Apr 05, 2013 5:39 pm



2 ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பழம்பெரும் நடிகை சுகுமாரி, சென்னையில் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.

சுகுமாரி

‘பட்டிக்காடா பட்டணமா, வசந்தமாளிகை, காதலுக்கு மரியாதை, யாரடி நீ மோகனி, வேட்டைக்காரன், பொன்னர் சங்கர்’ உள்பட தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சுகுமாரி.

இவர், மறைந்த டைரக்டர் பீம்சிங்கின் மனைவி ஆவார். சுகுமாரி, சென்னை தியாகராயநகர் போக் ரோட்டில் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு அவர் வீட்டில் உள்ள பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றியபோது சேலையில் தீப்பிடித்து உடம்பில் தீக்காயங்கள் ஏற்பட்டன.

மரணம்

உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்கள். முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்று சுகுமாரியிடம் உடல்நலம் விசாரித்தார்.

சுகுமாரியின் உடல்நிலை நேற்று மோசமடைந்தது. சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை 5.50 மணிக்கு அவர் மரணம் அடைந்தார். அவருடைய உடல் ஆஸ்பத்திரியில் இருந்து தியாகராயநகரில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துவரப்பட்டு, அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான திரையுலக பிரமுகர்களும், பொதுமக்களும், சுகுமாரியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

வாழ்க்கை குறிப்பு

மறைந்த நடிகை சுகுமாரிக்கு வயது 75. 1938–ம் ஆண்டு நாகர்கோவிலில் பிறந்தார். 10 வயதில் நடிக்க ஆரம்பித்தார். அவர், தமிழில் நடித்த முதல் படம் ‘ஓர் இரவு’. ‘நம்ம கிராமம்’ என்ற தமிழ் படத்தில் நடித்ததற்காக, சுகுமாரிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. கேரள அரசின் சிறந்த துணை நடிகை விருது மற்றும் பத்மஸ்ரீ விருதும் கிடைத்துள்ளன.

இவருடைய கணவர் மறைந்த டைரக்டர் ஏ.பீம்சிங் ஆவார். இவர்களுக்கு, சுரேஷ் பீம்சிங் என்ற ஒரே ஒரு மகன் இருக்கிறார். இவர், டாக்டர் ஆவார்.

மறைந்த நடிகைகள் லலிதா–பத்மினியின் தாயாரும், சுகுமாரியின் தாயாரும் உடன்பிறந்த சகோதரிகள்.

இறுதிச்சடங்கு

சுகுமாரியின் இறுதிச்சடங்கு சென்னையில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum