மதுவின் தீமையும் மாணவர்களின் கடமையும்: உயர்நீதிமன்ற நீதிபதி
Page 1 of 1

வீட்டில் உள்ளவர்கள் யாரும் மது குடித்தால் மதுவின் தீமையை நீங்கள் தான் எடுத்துச்சொல்லவேண்டும் என்று மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா வேண்டுகோள் விடுத்தார்.
அவசரமான இந்த உலகில் இந்தியாவில் இளைஞர்கள் ஒரு மிகப்பெரிய சொத்தாக உள்ளனர். அந்த இளைஞர்கள் நோய் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தால்தான் வருங்கால இந்தியா பொருளாதாரத்தில் பெரிய வளர்ச்சியை அடையும் என்ற நோக்கத்தில் இளைஞர்களின் ஆரோக்கிய திருவிழா தொடக்கவிழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று காலை நடைபெற்றது.
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா விழா மலரை வெளியிட்டார். அதை திட்டக்குழு துணை தலைவர் சாந்தா ஷீலா நாயர் பெற்றுக்கொண்டார். விழாவில் நீதிபதி கே.என்.பாஷா பேசியதாவது:-
லஞ்சம் ஒழியவேண்டும் என்றும், அந்த கருத்து ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வரவேண்டும் என்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறினார். அதுபோல மது என்ற அரக்கனை விரட்டி விடவேண்டும் என்ற உணர்வு ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வரவேண்டும்.
எனவே மாணவர்களே உங்கள் வீட்டில் தந்தையோ அல்லது அண்ணனோ அல்லது குடும்பத்தில் யாராவது மது அருந்தும் பழக்கம் வைத்திருந்தாலோ அவர்களிடம் நீங்கள் அன்பாக மதுவின் தீமைகளை எடுத்துக்கூறுங்கள். அவர்களிடம் கைகூப்பி அன்புடன் வேண்டுகோள்விடுங்கள். அவ்வாறு செய்தால் நிச்சயம் பலன்கிடைக்கும்.
அதுபோல புகை பிடிக்கும் பழக்கம் இருந்தாலும் அதன் தீமையை எடுத்துக்கூறி புகைப்பதை நிறுத்தும்படி சொல்லுங்கள். புகை பிடிப்பவர்களுக்கு மட்டும் தீங்கு அல்ல. புகையை பக்கத்தில் இருந்து சுவாசிப்பவர்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.
புகை பிடிப்பதனால் 40 வினாடிக்கு ஒருவன் இறந்து கொண்டிருக்கிறான். ஒருவர் ஒரு சிகரெட் பிடித்தால் அவரது வாழ்நாளில் 5 நிமிடத்தை அவன் இழக்கிறான். மது குடித்த உடன் அவனது நிலைமையை மறந்து விடுகிறான். மதுகுடிப்பதால் தான் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» இதோ மதுவின் கொடுமைகள் - அவை என்ன?
» இதோ மதுவின் கொடுமைகள் - அவை என்ன?
» கடமையும் கடைவிழியும்
» கடமையும் , கடைவிழியும்
» மாசடையும் உலகமும் நம் கடமையும்
» இதோ மதுவின் கொடுமைகள் - அவை என்ன?
» கடமையும் கடைவிழியும்
» கடமையும் , கடைவிழியும்
» மாசடையும் உலகமும் நம் கடமையும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum