தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாறுமாறாக பைக் ஓட்டிய வழக்கில் ஜான் ஆபிரகாம் கைது

Go down

தாறுமாறாக பைக் ஓட்டிய வழக்கில் ஜான் ஆபிரகாம் கைது Empty தாறுமாறாக பைக் ஓட்டிய வழக்கில் ஜான் ஆபிரகாம் கைது

Post  ishwarya Fri Apr 05, 2013 2:48 pm

தாறுமாறாக பைக் ஓட்டி 2 இளைஞர்களை காயப்படுத்திய வழக்கில் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் இன்று மும்பையில் கைது செய்யப்பட்டார்.
பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரகாம் கடந்த 2006ம் ஆண்டு மும்பையில்
படுவேகமாக பைக் ஓட்டிச் சென்று 2 இளைஞர்கள் மீது மோதினார். இதில் 2
இளைஞர்களும், அவரும் காயமைடந்தனர். இதையடுத்து ஜான் அந்த 2 இளைஞர்களையும்
மருத்துவமனையில் சேர்த்தார்.

இது குறித்த வழக்கு பந்த்ரா மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்
நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பு
அளிக்கப்பட்டது. அதில் கவனக்குறைவு மற்றும் தாறுமாறாக மோட்டார் சைக்கிளை
ஓட்டிய குற்றத்திற்காக ஜான் ஆப்ரகாமிற்கு 15 நாள் சிறைத் தண்டனையும்,
ரூ.15,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
ஆனால் அந்த நீதிமன்றம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே
என்று கூறிவிட்டது. இதையடுத்து அவர் ஜாமீன் கோரி மும்பை உயர்
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
ஆனால் நீதிபதி ஜானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர் இன்று மும்பையில் கைது செய்யப்பட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜான் ஆபிரகாம் விரலைக் கடித்த ரசிகை!
» நகைக்கடையை திறக்க வந்த ஜான் ஆபிரகாம் விரலைக் கடித்த ரசிகை!
»  மோசடி வழக்கில் ஆஜராகவில்லை: நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் மதுரை கோர்ட்டு உத்தரவு
» நடிகை புவனேஸ்வரி மூன்றாவது வழக்கில் கைது
» நடிகர் குணால் கொலை வழக்கில் நடிகை லவீனா கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum