படுத்ததும் தூக்கம் வர….! ஒரு ஆய்வின் தகவல்
Page 1 of 1

படுத்ததும் தூங்கி விடுவது எல்லோருக்கும் சாத்தியமில்லை. சிலருக்கு படுத்ததற்கு நீண்ட நேரத்திற்குப் பின்னரே தூக்கம் வரும். அப்படியும் தூக்கம் வராதவர்கள் கவுண்டிங் ஷீப் செய்வதுண்டு. அதா வது, எளிதில் தூக்கம் வராதவர்கள் ஒன்றிலிருந்து 100…. 200….. 300 வரை எண்ணத்துவங்குவார்கள். அப்படி எண்ணிக்கொண்டிருக்கும் போதே தூக்கம் வந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. இப்படி எண்ணுவதற்கு கவுண்டிங் ஷீப் என்று பெயர். இங்கிலாந்துகாரர்களுக்கு தூக்கம் பிடிப்பதற்கு குறைந்தது 37 நிமிடங்கள் ஆகிறது என்கிறது, இது குறித்த ஒரு ஆய்வு. அதற்காக அவர்கள் மெல்லிசையை விரும்பி கேட்கிறார்களாம். இந்த மெல்லிசையை கேட்டுக்கொண்டிருக்கும் போதே தூங்கிப் போவார்களாம்.
சுவாரசியமாக, இயற்கையான சப்தங்களை கேட்டுக்கொண்டே தூங்க முயற்சிப்பவர்களும் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக கிறீச் சிடும் பறவைகளின் ஒலிகள். மெல்லிய காற்றின் இரைச்சல், நீரோடையின் சலசலப்பு போன்றவை தூக்கத்தை எளிதில் வரவழைக்க பயன்படுபவையாக இருக்கின்றன என்கிறது இந்த ஆய்வு. இவற்றுக்கெல்லாம் மேலாக, இருக்கவே இருக்கிறது பழைமையான ஒரு முறை. அது தான் புத்தகம் படிப்பது. இதுவும் தூக்கத்தை வரவழைக்கிற விஷயங்களில் முக்கியமானதுதான். துணையுடன் பேசிக்கொண்டே தூங்கிப்போகிறவர்களும் இருக் கிறார்கள். விசித்திரமாக, கடிகாரத்தின் டிக் டிக் ஒசை, சாலையில் செல்லும் வாகனங்களின் சப்தம், வேக்குவம் க்ளீனர் மற்றும் ஹேர் ட்ரையரின் ஒலியும் தூக்கத்தை வரவழைக்கும் செயல் பட்டியலில் இடம் பெறுகின்றன. இவையத்தனைக்கும் வில்லனாக இருப்பது பக்கத்தில் தூங்குபவரின் குறட்டை சத்தம் என்று ஆத்திரப்படுகிறார்கள் உண்மையில் பாதிப்புக்குள்ளானவர்கள்

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» படுத்ததும் தூக்கம் வரவில்லையா உங்களுக்கான சில ஆலோசனைகள்.
» தூக்கம் கெடுவதால் கணித, விஞ்ஞான திறன் குறையும்! ஆய்வில் பரபரப்பு தகவல்
» தூக்கம் வர

Permissions in this forum:
You cannot reply to topics in this forum