மனநல நிபுணராக…..
Page 1 of 1
மனநல நிபுணராக…..
குழந்தைகளாக பிறக்கும் நாம் அடுத்தடுத்த கட்டங்களை அடையாமல் அதே நிலையிலேயே இருப்பது மனநலம் குன்றிய நிலை ஆகும். பிறவியிலேயே ஏற்படும் குறைபாடு, மூளை சேதமடைதல் ஆகிய காரணிகளால் மனவளர்ச்சி தடைபட்டு மூளையின் சிந்தனை, கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற குறைபாடுகளில் இருந்து அவர்கள் வெளிவர, சிறந்த மனநல நிபுணர்களின் துணை தேவைப்படுகிறது. அவர்களுக்கு சிறப்பு பள்ளிகளும், தொழில் பயிற்சி மய்யங்களும் தேவைப்படுகின்றன.
மனநல நிபுணர் பணி என்பது முழுக்க முழுக்க அர்ப்பணிப்பு, அக்கறை, சமூக பொறுப்பு கொண்டதாகும். அதிக அன்பு, கவனிப்பு மற்றும் புதிய அணுகுமுறைகளை யோசிக்கும் திறன் உடையவர்களாக இருக்க வேண்டும். மனநலம் குன்றிய துறையில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்கள், நோயாளிகளை கவனிப்பதற்கு பயிற்சியளிக்கப்படுகிறது. இத்துறையில் பணிபுரியும் நபர்கள் பொதுவாக நேர்மறை சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள்.
நட்பு ரீதியான மற்றும் ஈர்ப்புத்தன்மை கொண்ட இயல்பு, பொறுமை, அன்பு, கண்ணியம், நோக்கத்தை இழக்காத தன்மை, சிறந்த அணுகுமுறை, உற்சாகமான மற்றும் நேர்மைப் பண்பு போன்றவை இத்துறை நிபுணர்களுக்கு இருக்க வேண்டும். இந்தியாவில் ஏராளமான கல்வி நிறுவனங்கள், இத்துறையில் படிப்புகளை வழங்குகின்றன. இவற்றின் தரத்தை டில்லியிலுள்ள இந்திய மறுவாழ்வு கவுன்சில் மதிப்பிடுகிறது.
காது கேளாதோர் தொடர்பான பி.எட். படிப்பு, காதுகேளாதோர் தொடர்பான டி.எட்.(டிப்ளமோ இன் எஜுகேஷன்) படிப்பு, எம்.எஸ்சி (பேசுதல் மற்றும் கேட்டல்), பி.எஸ்சி (கேட்டல், மொழி மற்றும் பேசுதல்), பி.எம்.ஆர் மனநல பட்டப்படிப்பு, டி.எஸ்.இ (எம்.ஆர்) சிறப்பு படிப்பில் டிப்ளமோ, பி.எஸ்சி (செயற்கை உறுப்புகள் மற்றும் செயற்கை எலும்புகள்), செயற்கை எலும்புகள் பொறியியல் துறையில் டிப்ளமோ, பலவித மறுவாழ்வு பணிகளில் சான்றிதழ் படிப்பு, பார்வையற்றோர் தொடர்பான பி.எட். படிப்பு போன்றவை இந்த கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளாகும்.
வேலைவாய்ப்புகள்: ஆரம்ப பள்ளிகள், தொழிற்கல்வி மற்றும் மறுவாழ்வு மய்யங்கள், சிறப்பு பள்ளிகள், சிறப்பு படிப்பு திட்டங்கள், மருத்துவமனைகளில் இருக்கும் குழந்தை நல மய்யங்கள், குழந்தை வழிகாட்டி மருத்துவமனைகள், குழந்தை மேம்பாட்டு மய்யங்கள், கிராமப்புற ஆரம்ப சுகாதார மய்யங்கள் மற்றும் முக்கிய சுகாதார மய்யங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» மனநல நிபுணராக…..
» இதய சிகிச்சை நிபுணராக நடிக்கிறார் கவுண்டமணி.
» மனநல காப்பகத்தில் த்ரிஷா!
» டென்சன் வந்தா நகம் கடிக்கறீங்களா? உங்களுக்கு மனநல பாதிப்பு இருக்கலாம்: ஆய்வில் தகவல்
» மனநல மருத்துவர் வேதமாலிகா - நேர்காணல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum