தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்கள் எதிர்பார்ப்பும், ஆண்களின் செயல்பாடுகளும்!

Go down

பெண்கள் எதிர்பார்ப்பும், ஆண்களின் செயல்பாடுகளும்! Empty பெண்கள் எதிர்பார்ப்பும், ஆண்களின் செயல்பாடுகளும்!

Post  amma Fri Apr 05, 2013 12:26 pm

ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் விரும்பும் ஆண்கள் பல விசயங்களை தமக்காக மட்டுமே செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது போல் ஆண்களின் செயற்பாடுகள் அமையும் போது பெண்களின் மகிழ்விற்கு அளவேயிருப்பதில்லை. ஆனால் எதிர்பார்ப்புக்கு முரணான நிகழ்வுகள் ஏற்படும் போதுதான் குடும்ப வாழ்வில் பூகம்பங்கள் ஏற்படுகின்றன். பெண்கள் எதிர்பார்க்கும் விசயங்கள் அனைத்தையும் அவர்கள் சார்ந்த ஆண்களால் செய்ய முடியாத போதிலும் செய்யக்கூடிய விசயங்களையாவது நிறைவேற்றினால் அதுவே குடும்ப வாழ்வின் மகிழ்வுக்கு அச்சாணி போல் அமைகிறது.

சரி, ஆண்களிடமிருந்து பெண்கள் பொதுவாக எதிர்பார்ப்பது என்ன?
A) பெண்கள் ஏதேனும் ஒரு விஷயம் குறித்து ஆண்களிடம் மனம் விட்டு பேசும்போது அதை ஆண்கள் மிக கவனமாக கேட்டுக் கொண்டிருப்பதை விரும்புகின்றார்கள். இவ்வாறு கேட்டுகொண்டு அதற்கு ஏற்றாற்போல நடந்துகொண்டால் அவர்களது மன உணர்வை ஆண்கள் புரிந்துக் கொண்டதாக பெண்கள் நினைக்கின்றார்கள்.

B)பெண்களின் கோப, எதிர்மறையான எல்லா உணர்வுகளும் அவர்களின் மாதவிடாய் காலத்துடன் தொடர்பானவை அல்ல என்பதை புரிந்துகொள்பவர்களாக ஆண்கள் இருக்க வேண்டும்.

C)ஆண்கள் இரக்க உணர்ச்சியை முன்னேற்றிக்கொண்டால் நல்லது. ஆனால் அதற்காக கண்ணீர்விட்டு அழ வேண்டும் என்பதில்லை. தனது துணையுடன் மேலும் உணர்வுபூர்வமாக நடந்துகொள்ள வேண்டும். பெண்களை பொறுத்தவரை அடிக்கடி பேச வேண்டும்.

D)தனது கணவர் ஒரு மாதத்திற்கு ஒரு தடவையேனும் தமக்கு சமைத்துக் கொடுக்க வேண்டும் என பெண்கள் விரும்புவர். இது பொதுவாக வழக்கத்துக்கு மாறானதுதான். ஆனால், இவ்வாறான வியப்பூட்டும் மூட்டும் விசயங்களை ஆண்களிடம் பெண்கள் அதிகம் எதிர்பார்கிறார்கள். .

E)ஆண்களே, உங்கள் துணிச்சல் நீங்கள் வாகனம் செலுத்தும் வேகத்தில்தான் தெரிய வேண்டும் என்றில்லை. தாறுமாறாக ஒழுங்கீனமாக வாகனம் செலுத்தும் போது பெண்களை அதிகமாக தாக்குகிறது. அதனால் மிகவும் மிருதுவாதாக வாகனத்தை செலுத்துங்கள்.

F)பெண்களுக்கு பாதுகாப்பாக இருங்கள். ஆனால் அவர்களை சொந்த உடமைகளாக கருதாதீர்கள்.

G)தமது ஆண் எப்போதும் தங்களிடம் தங்களது காதலை வெளிப்படுத்துவதை பெண்கள் விரும்புகின்றார்கள். ஆண்களை விட்டு பெண்கள் நீங்கும் தருணங்களில் அந்த அன்பை வித்தியாசமான வழிகளில் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

H)ஆண்கள் விரும்பும் பெண்களை மிக வேகமாக இழப்பதற்கு ஒரு வழி பொய் சொல்வது. ஆண்கள் மிக நேர்மையாக இருப்பதையே பெண்கள் அதிகமாக விரும்புகின்றார்கள்.

I)வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் ஆண்களிடமிருந்து பெண்கள் அதிகமாக எதிர்பார்க்கின்றார்கள்.

J)விடுமுறை நாட்களில் கணவர் வீடுகளில் இருக்கும்போது வேலைகளை பகிர்ந்து கொண்டு செய்வதை பெண்கள் அதிகமாக விரும்புகின்றார்கள்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்கள் எதிர்பார்ப்பும், ஆண்களின் செயல்பாடுகளும்!
»  ஆண்களின் பெயரை சுமக்கும் பெண்கள்..
» பெண்கள் வாழ்க்கையில் ஆண்களின் பங்கு
» தமிழ் பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும், ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும் - படையினரை உற்சாகப்படுத்திய கோத்தபாய
» மரபணுக்களும் செயல்பாடுகளும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum