எய்ட்ஸ், காசநோய்க்கு ஒரே மருந்தில் சிகிச்சை!
Page 1 of 1

“எய்ட்ஸ், காசநோய் சிகிச்சைக்கு, ஒரே மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளோம். இம்மருந்தை, ஆறு ஆண்டுகளுக்குள் சந்தைப்படுத்த முயல்கிறோம்’ என, காசநோய் ஆராய்ச்சி மய்ய விஞ்ஞானி, வனஜா குமார் கூறினார்.
தேசிய அளவிலான காசநோய் ஆராய்ச்சி மய்யம், சென்னை சேத்துப்பட்டில் உள்ளது. இம்மய்யத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வனஜா குமார் தலைமையிலான குழுவினர், உயிர்க்கொல்லி நோய்களான எய்ட்ஸ், காசநோய் சிகிச்சைக்கு, ஒரே மருந்தை கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியில், முதல்கட்ட சோதனை களை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
இதுகுறித்து, வனஜா குமார் செய்தியாளர் களிடம் கூறியதாவது: உலக மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கினர், காசநோய் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1940ஆம் ஆண்டுக்குப் பின் தான், காசநோய்க்கு மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டன.
இந்நோய்க்கு தற்போது தரப்படும், ரிபம்பைசின், கேப்ரியோ மைசின்’ உள்ளிட்ட மருந்துகளை, நோயாளிகள், நாள் ஒன்றுக்கு 30 கிராம் வரை, ஆண்டுக்கணக்கில் உட்கொள்ள வேண்டி உள்ளது. இதனால், நாளடைவில் மருந்து செயலிழந்து, நோயாளி இறக்க நேரிடுகிறது.
மேலும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படு வோருக்கு, காசநோய் எளிதில் வருகிறது. பாக்டீரியாவால் ஏற்படும் காசநோய்க்கும், வைரஸ் தாக்கத்தால் உண்டாகும் எய்ட்ஸ் நோய்க்கும், ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.
இச்சூழலில் எய்ட்ஸ், காசநோய் இரண்டின் தாக்கத்திற்கும் ஆளாவோருக்கு, முதலில் காசநோய்க்கான சிகிச்சை மட்டுமே அளிக்கப் படுகிறது. இதை கருத்தில் கொண்டு, இரண்டு நோய் களுக்கும் ஒரே மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச் சியை, கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பரில் துவக்கி னோம்.
இதற்காக அந்தமான், வங்காள விரிகுடா, ராமேஸ்வரம் போன்ற கடற்பகுதிகளில் உள்ள, 55க்கும் மேற்பட்ட கடல்வாழ் பாக்டீரியா வகை நுண்ணுயிரிகளை எடுத்து, சோதனைக் கூடங்களில் ஆய்வு செய்தோம்.
இவற்றில், பவளப்பாறைகள் அதிகம் நிறைந்த ராமேஸ்வரம் கடற்பகுதியிலிருந்து பிரித்தெடுக்கப் பட்ட, “ஸ்ட்ரெப்டோமைசிஸ்’ வகை நுண்ணுயிரி எங்கள் ஆராய்ச்சிக்கு ஏற்புடையதாக இருந்தது. இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் நடந்த இந்த ஆராய்ச்சி யின் முதல்கட்ட சோதனைகள், கடந்த ஆண்டு நவம்பரில் வெற்றிகரமாக முடித்தன.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் மூலம், கடந்த பிப்ரவரியில், இக்கண்டுபிடிப்புக்கு காப் புரிமை பெற்றுள்ளோம். இந்த மருந்துக்கு, “டிரான் சிட்மைசின்’ என பெயரிட்டுள்ளோம். இதை மருந்து, மாத்திரை வகைகளில் பயன்படுத்த திட்ட மிட்டுள்ளோம். இன்னும், ஆய்வகம், விலங்கு மற்றும் மனித உடல் என, பல கட்ட பரிசோ தனைகள் மேற் கொள்ள வேண்டியுள்ளன.
இவற்றை முடித்து, இம்மருந்தை ஆறு ஆண்டிற்குள் சந்தைப் படுத்த முயல்கிறோம். இதற்கு, 200 கோடி ரூபாய் வரை தேவை. இந்நிதியை பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்க்கும் நிலையில் உள்ளோம். இம்மருந்து சந்தைப்படுத்தப்பட்டால், இந்தியா மட்டுமின்றி, உலகளவில் உள்ள எய்ட்ஸ், காச நோயாளிகளுக்கு, இம்மருந்து பேருதவியாக அமையும்.
- இவ்வாறு வனஜா குமார் கூறினார்.
பேட்டியின் போது, ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்த, அய்.அய்.டி., பேராசிரியர் முகேஷ் டோப்லே, பெரியார் பல்கலையின், மைக்ரோபயாலஜி’ துறை தலைவர் பாலகுருநாதன், காசநோய் ஆராய்ச்சி மய்ய விஞ்ஞானி லூக் எலிசபெத் ஹன்னா ஆகியோர் உடனிருந்தனர்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» எய்ட்ஸ், காசநோய்க்கு ஒரே மருந்தில் சிகிச்சை!
» இருமல் மருந்தில் போதை அபாயம்!
» இதய நோய்களுக்கு இனி அறுவை சிகிச்சை தேவை இல்லை :புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு!
» எய்ட்ஸ் பாதிப்பா?
» எச்.ஐ.வி. அல்லது எய்ட்ஸ் பாதித்தவருடன்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum