தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆக்குபேஷனல் தெரபிக்கு (occupational therapy) பணி வாய்ப்பு

Go down

ஆக்குபேஷனல் தெரபிக்கு (occupational therapy) பணி வாய்ப்பு Empty ஆக்குபேஷனல் தெரபிக்கு (occupational therapy) பணி வாய்ப்பு

Post  amma Fri Apr 05, 2013 12:19 pm

உலக அளவில் பல்வேறு காரணிகளால் மன அழுத்த நோய் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குடும்ப சூழ்நிலை, பொருளாதார நெருக்கடி, பணிச்சுமை, முதுமை போன்றவை மன நல கோளாறுகளுக்கு அடிப்படையாக விளங்கின்றன. இதுபோன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகும் நபர்கள் பிறருக்கு சுமையாக மாறிவிடுகின்றனர். நோய்களால் நீண்ட நாட்களாக அவதிப்படுபவர்களும் மனநல பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதுபோன்ற நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதுதான் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்களின் பணி.

தங்களாலும் இயல்பான வாழ்க்கையை தொடர முடியும் என்று இவர்களுக்கு நம்பிக்கை அளித்தல், உணவு, உடையில் அவர்களது கவனத்தை செலுத்த வைத்தல், அன்றாட வேலைகளுக்காக நோயாளிகள் யாரையும் சார்ந்திருக்காமல் வாழ்க்கையை மேற்கொள்ள சிறப்பு சிகிச்சை அளித்தல் போன்றவை ஆக்குபேஷனல் தெரபியில் முக்கியமாக விளங்குகின்றன. மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்ட்களுடன் இவர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.

ஊனமுற்ற குழந்தைகள், செயற்கை உறுப்புகள் பொருத்தியவர்கள், குறை பிரசவ குழந்தைகள், நரம்பியல் பாதிப்புகளால் சிரமப்படுபவர்களுக்கு ஆக்குபேஷனல் தெரபி உதவுகிறது. செயற்கை உறுப்புகளை பயன்படுத்தவும், குறிப்பிட்ட தசைகளின் இழந்த செயல்பாடுகளை மீட்கவும் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் சிகிச்சை அளிக்கின்றனர். மனநலன் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நிரந்தரமாக ஊனமுற்றவர்களுக்கு கைவினை பொருட்கள் செய்யவும், அன்றாட வேலைகள் செய்யவும் பயிற்சி அளிக்கின்றனர். நோயாளிகளுக்கு புதிய உபகரணங்கள் வடிவமைக்க தொழில்நுட்ப ஆலோசகர் களாகவும் பணியாற்றுகின்றனர். பயிற்சியாளராகவும், ஆசிரியராகவும் கூட இவர்களால் பணியாற்ற முடியும். மருத்துவமனைகள் தோறும் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்களுக்கு மவுசு அதிகம் உள்ளது. ஆக்குபேஷனல் தெரபி டிப்ளமோ கோர்சாக படிக்கும் போது அனாட்டமி, பிசியாலஜி உள்ளிட்ட பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum