தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழர்கள் மீது அடக்குமுறையை கையாண்டால் தனி ஈழம் அமைவது வெகுதூரத்தில் இல்லை: யஸ்வந்த் சின்ஹா பேச்சு

Go down

தமிழர்கள் மீது அடக்குமுறையை கையாண்டால் தனி ஈழம் அமைவது வெகுதூரத்தில் இல்லை: யஸ்வந்த் சின்ஹா பேச்சு  Empty தமிழர்கள் மீது அடக்குமுறையை கையாண்டால் தனி ஈழம் அமைவது வெகுதூரத்தில் இல்லை: யஸ்வந்த் சின்ஹா பேச்சு

Post  amma Thu Apr 04, 2013 6:04 pm



‘‘இலங்கையில் தமிழர்கள் மீது அடக்குமுறையை கையாண்டால் தனி ஈழம் அமைவது வெகுதூரத்தில் இல்லை என்பதை ராஜபக்சேவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்’’, என்று சென்னையில் நடந்த கூட்டத்தில் பாரதீய ஜனதாக கட்சி மூத்த தலைவர் யஸ்வந்த் சின்ஹா எம்.பி. கூறினார்.

‘‘இலங்கை தமிழர் பிரச்சினை, இந்திய தமிழ் மீனவர்கள் மீதான தாக்குதல்கள்’’ குறித்து தமிழக பாரதீய ஜனதா கட்சி சார்பில் சிறப்பு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஸ்வந்த் சின்ஹா எம்.பி. பேசியதாவது:–

ராணுவத்தால் தீர்வு கிடைக்காது

இலங்கை பிரச்சினையை எந்த முறையில் தீர்க்க வேண்டுமோ அந்த வழியில் தீர்க்க வேண்டும். பாரதீய ஜனதா கட்சி ஆட்சி காலத்தில் வெளியுறவுத்துறை மந்திரியாக நான் இருந்த போது போர் நிறுத்த உடன்படிக்கையை கடைபிடிக்க வலியுறுத்தினோம். பிறகு வந்த காங்கிரஸ் அரசு முறையாக ஒப்பந்தங்களை கடைபிடிக்க வலியுறுத்தாததால் பிரச்சினைகள் இனப்படுகொலை வரை ஏற்பட்டுள்ளது.

இலங்கையை பொறுத்தவரையில் தமிழர் பிரச்சினைக்கு ராணுவத்தால் தீர்வு கிடைக்காது என்பதில் பாரதீய ஜனதா கட்சி உறுதியாக இருக்கிறது. இலங்கையில் 2005–ம் ஆண்டு ஏற்பட்ட ராஜபக்சே அரசுக்கு இந்திய அரசு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்தது. குறிப்பாக 2009 மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த இறுதி தாக்குதலிலும் இந்திய அரசு உதவிகளை செய்தது.இந்தியாவும், இலங்கையும் அமைத்துக் கொண்ட 3 பேர் கொண்ட குழுவினரின் கருத்துக்களின் அடிப்படையிலேயே இனப்படுகொலை நடந்தது.இலங்கை விஷயத்தில் அமெரிக்காவை பின்பற்றி செல்லாமல், இந்தியாவே தனியாக தீர்மானம் கொண்டு வந்து, உறுப்பு நாடுகளின் ஆதரவை பெற வேண்டும். இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் ராணுவத்தை முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும்.ராஜீவ்காந்தி–ஜெயவர்த்தனே ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டும். இதுபோன்ற ஆக்கப்பூர்வமான யோசனைகளை பாராளுமன்றத்தில் தெரிவித்தேன். ஆனால் மத்திய அரசு வீடுகள் கட்டி தருவதாக கூறுகின்றனர். வீடு கட்டி தருவதால் மனித உரிமை மீறல்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

வெகுதொலைவில் இல்லை

மனித உரிமை மீறல்கள் நடக்கும் நாடுகளில் காமன்வெல்த் நாடுகளின் கூட்டங்கள் நடத்த கூடாது என்று அதன் சரத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த்த நாடுகளின் கூட்டத்தை நடத்த கூடாது என்று இந்தியா வலியுறுத்த வேண்டும்.இலங்கையிலும் ராஜபக்சே அரசு தொடர்ந்து தமிழர்கள் மீது அடக்கு முறையை கையாண்டால் தனி ஈழம் அமைவது வெகுதொலைவில் இல்லை என்பதை ராஜபக்சேவுக்கு கூறிகொள்ள விரும்புகிறேன். இந்திய தமிழ் மீனவர்கள் தாக்கப்படுவதற்கு கச்சத்தீவை காங்கிரஸ் அரசு தாரை வார்த்ததுதான் காரணம். வரும் காலங்களில் சர்வதேச ஒப்பந்தத்தை மதிக்கும் வகையில் இலங்கை நடக்க அறிவுறுத்த வேண்டும்.

மக்கள் பாடம் புகட்டுவார்கள்

இந்த பிரச்சினைக்கு காரணமே இந்தியாவின் பலவீனமான அரசும், பலவீனமான பிரதமரும் தான் காரணம். ஆனால் இந்தியாவும், இந்திய மக்களும் பலவீனமானவர்கள் அல்ல. வரும் தேர்தல்களில் இந்தியாவில் காங்கிரஸ் அரசுக்கும், இலங்கையில் ராஜபக்சே அரசுக்கும் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக மாநில செயலாளர் வானதி சீனிவாசன் வரவேற்றார். கூட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் இல.கணேசன், தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ, ஹெச்.ராஜா மற்றும் பழ.நெடுமாறன், அவ்வை நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜபக்சேவை தண்டிக்க, தமிழ் ஈழம் அமைக்கக் கோரி ஜெனீவாவில் தமிழர்கள் பேரணி
» ஹிம்மத்வாலா ரீமேக்கில் சோனக்ஷி சின்ஹா
» பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா மருத்துவமனையில் அனுமதி
»  பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா மருத்துவமனையில் அனுமதி
» ராணி முகர்ஜியின் பரம ரகசியத்தை அம்பலப்படுத்திய சத்ருகன் சின்ஹா.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum