வாக்குரிமை பற்றிய முக்கியத்துவத்தை வாக்காளர்களுக்கு பத்திரிகைகள் தெரிவிக்க வேண்டும் : தேர்தல் ஆணைய இயக்குனர் அக்ஷய் ராவத் பேச்சு
Page 1 of 1
வாக்குரிமை பற்றிய முக்கியத்துவத்தை வாக்காளர்களுக்கு பத்திரிகைகள் தெரிவிக்க வேண்டும் : தேர்தல் ஆணைய இயக்குனர் அக்ஷய் ராவத் பேச்சு
வாக்குரிமை பற்றிய முக்கியத்துவத்தை வாக்காளர்களுக்கு பத்திரிகைகள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய தேர்தல் ஆணைய இயக்குனர் அக்ஷய் ராவத் கூறினார்.
கருத்தரங்கு
கர்நாடக பத்திரிகை கவுன்சில் சார்பில் தேர்தல் தொடர்பான கருத்தரங்கு விதாகசவுதாவில் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கை மத்திய தேர்தல் ஆணைய இயக்குனர் அக்ஷய் ராவத் தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:–பொது தேர்தல் நடைபெறும்போது தேர்தலை நல்ல முறையில் நடத்த பத்திரிகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கும் முன்பே அதை பத்திரிகைகள் கூறி விடுகின்றன. இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
பணத்திற்கு செய்தி
கடந்த சில ஆண்டுகளாக பணத்திற்கு செய்தி (பெய்டு நியூஸ்) என்ற கலாசாரம் பெருகி வருகிறது. பண பலம் உள்ளவர்கள் தேர்தலில் வெற்றி பெற இது ஒரு வழியாக அமைந்து உள்ளது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. பணத்திற்காக செய்தி என்பது மிக மோசமான கலாசாரத்தை ஏற்படுத்துகிறது.பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளை மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். பணத்திற்காக செய்தியை தடுக்க பத்திரிகைகள் சுய கட்டுப்பாடு விதித்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அத்தகைய செய்திகளை வெளியிட மாட்டோம் என்று ஒவ்வொரு பத்திரிகையும் சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வாக்குப்பதிவு அதிகரிக்க...
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக எல்லா ரீதியான தேர்தல் பிரசாரத்திற்கும் தடை விதிக்க வேண்டியுள்ளது. ஆனாலும் கூட பத்திரிகைகள் ஒரு வேட்பாளர் அல்லது ஒரு கட்சிக்கு பயன் ஏற்படும் வகையில் தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடத்துவது சட்டப்படி குற்றமாகும்.வலுவான நல்ல ஜனநாயகத்தை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் பத்திரிகைகளின் பங்கு மகத்தானது. தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க வாக்குப்பதிவு பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதை பற்றிய நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகைகள் முக்கியத்துவம் வழங்க வேண்டும். வாக்குரிமை பற்றிய முக்கியத்துவத்தை வாக்காளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அக்ஷய் ராவத் கூறினார்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» தேர்தல் சுதந்திரமாக நடைபெற மக்களின் பங்களிப்பு அவசியம் தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் பேச்சு
» ‘தண்ணிப் பேச்சு’க்கு வருத்தம் தெரிவிக்க மறுத்த த்ரிஷாவுக்கு சரக்கு பாட்டில்கள் பார்சல்!!
» அஜீத் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும்… ரஜினிக்கு கண்டனம்! – சினிமா சங்கங்கள் தீர்மானம்
» தேர்தல் முடிவு பற்றிய கருத்து : குஷ்புவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!!
» இயக்குனர் சங்க தேர்தல்: துணைத் தலைவர்களாக சேரன், சமுத்திரக்கனி தேர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum