தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குஜராத்தில் லோகயுக்தா மசோதா மூலம் ஆளுனரை வீழ்த்திய மோடி

Go down

 குஜராத்தில் லோகயுக்தா மசோதா மூலம் ஆளுனரை வீழ்த்திய மோடி  Empty குஜராத்தில் லோகயுக்தா மசோதா மூலம் ஆளுனரை வீழ்த்திய மோடி

Post  amma Thu Apr 04, 2013 5:39 pm



குஜராத் சட்டசபையில் முதல் மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான அரசு லோகயுக்தா ஆயோக் 2013 என்ற மசோதாவை நேற்று தாக்கல் செய்தது. இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆளுனர் அதிகாரம் குறைப்பு

சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின்படி ஆளுனர் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரது முக்கியத்துவம் குறைக்கப்படும். மேலும், இந்த மசோதாவின்படி, முதல் மந்திரிக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும். அவரது தலைமையின் கீழ் தேர்வு குழு ஒன்று செயல்படும். இந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே ஆளுனர் செயல்பட இயலும். குழுவின் உறுப்பினர் நியமனங்களும் முதல் மந்திரியின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும்.

வகேலா எதிர்ப்பு

இது குறித்து சட்டசபையில் மசோதா தாக்கலின்போது எதிர்க்கட்சி தலைவர் சங்கர் சிங் வகேலா பேசும்போது, ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து அரசு தப்பித்து செல்லும் வழியை தேர்ந்தெடுத்துள்ளது. அரசானது தன்னை காத்து கொள்ளவே மசோதா அறிமுகம் செய்யப்படுகிறது என்று குற்றம் சாட்டினார். கடந்த 2003ம் ஆண்டில் இருந்து லோகயுக்தா பதவிக்கான இடம் காலியாக இருப்பதை சுட்டி காட்டிய வகேலா அரசை அதற்காக கடிந்து கொண்டார்.

நேர்மையான அரசு என்றால், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவை திரும்ப பெற்று ஆர்.ஏ. மேத்தாவை லோகயுக்தா தலைவராக நியமனம் செய்ய வேண்டும் என்றார். லோகயுக்தா தலைவராக மேத்தாவை நியமிக்க கோர்ட் ஒப்புதல் அளித்திருப்பதையும் அப்பொழுது அவர் சுட்டி காட்டி பேசினார். எனினும், மசோதா சட்டசபையில் நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum