தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கவுதம் மேனனுடன் இணையும் தனுஷ்

Go down

கவுதம் மேனனுடன் இணையும் தனுஷ் Empty கவுதம் மேனனுடன் இணையும் தனுஷ்

Post  ishwarya Thu Apr 04, 2013 5:12 pm

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்து தற்போது வெள்ளித்திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘3’. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கொல வெறி’ பாடல் படம் வெளிவரும் முன்பே இப்படத்தின் மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்த தனுஷும், கவுதம் மேனனும் இணைந்து ஒரு படம் பண்ண இருக்கிறார்கள். இருவரும் இது சம்பந்தமாக சந்தித்து பேசிக் கொண்டார்கள் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

கவுதம் மேனன் தற்போது ஜீவா, சமந்தா நடிப்பில் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தினை இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து விஜய்-ஐ வைத்து ‘யோஹன்’ படத்தை இயக்க இருக்கிறார்.

தனுஷ் ‘3’ படத்தினைத் தொடர்ந்து இந்திப் படமொன்றிலும், தமிழில் பரத்பாலா இயக்கும் புதுப்படமொன்றிலும் நடிக்க இருக்கிறார். இருவரும் தாங்கள் முன்பே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு, இணைந்து படம் பண்ண திட்டமிட்டிருக்கிறார்கள்.

இப்படத்தில் ஹீரோயின், தயாரிப்பாளர், வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.

ஆனால் இப்படத்திற்காக ஒருவர் மட்டும் ஒப்பந்தமாகியுள்ளார். ஆம்… அவர் வேறு யாருமல்ல ‘கொல வெறி’ பாடல் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum