தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐதராபாத் ஓட்டலில் நண்பர்களுடன் ஈஸ்டர் கொண்டாடிய நயன்தாரா

Go down

 ஐதராபாத் ஓட்டலில் நண்பர்களுடன் ஈஸ்டர் கொண்டாடிய நயன்தாரா Empty ஐதராபாத் ஓட்டலில் நண்பர்களுடன் ஈஸ்டர் கொண்டாடிய நயன்தாரா

Post  ishwarya Thu Apr 04, 2013 5:06 pm

பிரபுதேவாவுடன் காதல் முறிவுக்குப் பின் நயன்தாரா மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் ராணாவுடன் ஒரு படத்திலும், கோபிசந்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படங்களில் நடிப்பதற்காக ஐதராபாத்தில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் நயன்தாரா நேற்று தோழிகள் சிலருடன் சேர்ந்து ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினார். ஏற்கனவே நயன்தாராவுக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டு. அவர் கிறிஸ்தவர் என்ற போது தீபாவளி, கிறிஸ்துமஸ் என அனைத்து பண்டிகைகளை கொண்டாடுவது வழக்கம்.

பிரபுதேவாவுடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்த போது நயன்தாரா இந்து மதத்துக்கு மாறினார். தற்போது பிரபுதேவாவுடன் காதல் முறிவால் மீண்டும் நடிக்க வந்த நிலையில் நேற்று ஈஸ்டர் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்த அவர் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு நண்பர்களை வரவழைத்தார். அங்கு அப்பம், சிக்கன் சாப்பாடு, பாயா என ஸ்பெஷல் சாப்பாட்டை ஆர்டர் கொடுத்து வரவழைத்து நண்பர்களுக்கு விருந்து கொடுத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “முதல் முறையாக குடும்பத்துடன் இல்லாமல் தனியாக பண்டிகையை கொண்டாடுகிறேன். இது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. என்றாலும் நண்பர்களுடன் ஈஸ்டர் கொண்டாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum