தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சவீதா மரணம் குறித்த அறிக்கையில் கருவிற்கு அளித்த முக்கியத்துவம் தாய்க்கு அளிக்கப்படவில்லை: கணவர் குற்றச்சாட்டு

Go down

சவீதா மரணம் குறித்த அறிக்கையில் கருவிற்கு அளித்த முக்கியத்துவம் தாய்க்கு அளிக்கப்படவில்லை: கணவர் குற்றச்சாட்டு Empty சவீதா மரணம் குறித்த அறிக்கையில் கருவிற்கு அளித்த முக்கியத்துவம் தாய்க்கு அளிக்கப்படவில்லை: கணவர் குற்றச்சாட்டு

Post  amma Thu Apr 04, 2013 4:52 pm



அயர்லாந்து நாட்டில் இந்தியாவை சேர்ந்த சவீதா ஹலப்பனாவர் என்பவர் வசித்து வந்தார். இவர் ஒரு பல் மருத்துவர். இவர் கடந்த வருடம், ஆபத்தான நிலையில் கரு கலைப்பு மேற்கொள்ள வேண்டிய சூழலில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. கத்தோலிக்க நாடான அயர்லாந்து நாட்டு சட்டப்படி கருக்கலைப்பு தடை செய்யப்பட்ட ஒன்று. இதனை தொடர்ந்து சவீதா மரணம் அடைந்தார்.

சவீதா மரணம் அடைந்ததற்கு அந்நாட்டில் அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கரு கலைப்பை சட்டபூர்வமாக்க வலியுறுத்தி பேரணியும் நடைபெற்றது. தற்போது, அவரது மரணம் குறித்து விசாரணை செய்து சுகாதார துறை செயலகம் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், சவீதாவின் உடல் நலம் குறித்து போதுமான வகையில் பரிசோதனை மேற்கொள்ளவில்லை. அவர் மிக பலவீனமாக இருந்தார். இந்நிலையில் கர்ப்பத்தில் ஏற்பட்ட பாதிப்பு அவரை மேலும் பலவீனமடைய செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், சவீதாவின் கணவர் பிரவீன் இந்த அறிக்கையால் திருப்தி அடையவில்லை. ஆபத்தான நிலையில் சவீதாவிற்கு சிகிச்சை செய்து காப்பாற்றும் நடவடிக்கையில் ஏன் ஈடுபடவில்லை என்ற கேள்விக்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை என்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்த தகவல் அந்நாட்டு செய்தி இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

குறிப்பாக, கருவிற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அதன் தாய்க்கு அளிக்கப்படவில்லை என்பதையே சுகாதார அறிக்கை தெளிவாக காட்டுகிறது என்றும் பிரவீன் கூறியதாக தகவல் தெரிவிக்கின்றது
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» எனக்கு முக்கியத்துவம் வேண்டாம்; கதைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்! அஜித்
» கர்ப்பிணிகளே, கிரீன் டீ அதிகம் குடிக்காதீங்க: கருவிற்கு ஆபத்துகர்ப்பிணிகளே, கிரீன் டீ அதிகம் குடிக்காதீங்க: கருவிற்கு ஆபத்து
» என் சகோதரியின் கணவர், மணமாகி இருபது வருடம் கழித்து வேறொரு பெண்ணோடு பழகுகிறார். என் சகோதரி தன்னை விட்டுவிட்டு கணவர் சென்று விடுவாரோ என்று அஞ்சுகிறாள். என்ன செய்வது என்று கூறுங்கள்.
» அமெரிக்காவின் அறிக்கையில் உண்மைக்க புறம்பான விடயங்கள். முற்றாக நிராகரிக்கின்றோம். ஜெனிவாவில் மகிந்த சமரசிங்க.
»  எனது வயது 41. திருமணமாகி நான்கு குழந்தைகளுடன் எந்த குறையுமில்லாமல் வாழ்ந்து வந்தோம். காலை உணவு முடித்து டூவீலரில் வெளியில் சென்ற என் கணவர் ஒரு மாதமாகியும் வீடு திரும்பவில்லை. மிகவும் கவலையாகவும், வேதனையாகவும் உள்ளது. என் கணவர் வீடு திரும்ப என்ன பரிகாரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum