தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுனாமி பீதிக்கு இடையே அமெரிக்க போர் கப்பலில் கமலுக்கு விருந்து…!

Go down

சுனாமி பீதிக்கு இடையே அமெரிக்க போர் கப்பலில் கமலுக்கு விருந்து…! Empty சுனாமி பீதிக்கு இடையே அமெரிக்க போர் கப்பலில் கமலுக்கு விருந்து…!

Post  ishwarya Thu Apr 04, 2013 2:08 pm

கடந்த வாரம் இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் சுனாமி பீதியில்
உறைந்து போய் இருந்த நிலையில், நடுக்கடலில் அமெரிக்க போர்க் கப்பலில்
நடிகர் கமல்ஹாசனுக்கு விருந்து அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அணுசக்தி
போர்க்கப்பலான யு.எஸ்.எஸ்.கார்ல்வின்ஸ் கப்பல், கடந்த வாரம் இந்தியாவுடன்
இணைந்து கூட்டு பயிற்சியில் ஈடுபடுவதற்காக இந்தியா வந்திருந்தது. சென்னை
அருகே இந்த கப்பல் முகாமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்தக் கப்பலில் நடந்த விருந்தில் சிறப்பு விருந்தினராக
நடிகர் கமல்ஹாசன் அழைக்கப்பட்டு, கமலும் விருந்தில் பங்கேற்று இருக்கிறார்.
அமெரிக்க போர்க் கப்பலில் நடைபெற்ற விருந்துக்கு அழைக்கப்பட்ட முதல்
இந்திய நடிகரும் கமல்தான். மேலும் விருந்து நடந்த அன்று தான்
இந்தோனேசியாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் காரணமாக இந்தியா உள்ளிட்ட 28
நாடுகள் சுனாமி பீதியில் உறைந்து போய் இருந்தது. ஆனால் கப்பலில் இருந்த
கமலுக்கு இப்படி ஒரு விஷயம் நடந்தது தெரியவே தெரியாதாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum